‘நோட்டரி பப்ளிக்’ பதிவை புதுப்பிக்க - ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் : சட்டத்துறை செயலர் அறிவிப்பு

‘நோட்டரி பப்ளிக்’ பதிவை புதுப்பிக்க -  ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் :  சட்டத்துறை செயலர் அறிவிப்பு
Updated on
1 min read

சான்றுறுதி அலுவலர்கள் (நோட்டரி பப்ளிக்) பதிவை புதுப்பிக்க மார்ச் 10 முதல் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்என்று சட்டத்துறை அறிவித்துள் ளது.

இதுகுறித்து சட்டத்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 2019-ம் ஆண்டு சான்று றுதி அலுவலர்கள் விதிகளின்படி, சான்றுறுதி அலுவலர்களின் தொழிற்சான்றிதழை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை அதன் காலக்கெடு முடிவதற்கு 6 மாதத்துக்கு முன்னதாக உரிய அரசிடம் படிவம் 16-ல் இணையம் வழியில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், சான்றுறுதி அலுவலரின் நியமனம், தொழிற் சான்றிதழ் புதுப்பித்தல், தொழில் செய்யும் இடத்தின் விரிவாக்கம், தொழிற்சான்றிதழுக்கான நகல் வழங்குவதற்கான விண்ணப்பம் மற்றும் ஆண்டு விவர அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக ‘tnnotary.tn.gov.in’ என்ற இணையதள முகவரி அரசால் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சான்றுறுதி அலுவலர்கள், தங்கள் தொழிற்சான்றிதழ்புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு மார்ச் 10-ம் தேதி முதல்மேற்கண்ட இணையதளம் வழி யாக வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in