திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி - இளைஞரிடம் ரூ.1.27 கோடி நகைகள் அபகரிப்பு : 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி  -  இளைஞரிடம் ரூ.1.27 கோடி நகைகள் அபகரிப்பு :  2 பெண்கள் உட்பட 3 பேர் கைது
Updated on
1 min read

வேடசந்தூர் அருகே திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகளைப் பெற்றுக் கொண்டு திருப்பித்தர மறுத்த பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

வேடசந்தூர் அருகே முத்துபழனியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர், வட மாநிலங்களில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது பங்குதாரராக, அதே பகுதியைச் சேர்ந்த அறிவழகன் உள்ளார். பாலசுப்பிரமணி திருமணத்துக்கு பெண் பார்த்து வந்த நிலையில், அறிவழகன் தனது மனைவி கலைச்செல்வியின் தங்கை முத்துலட்சுமியைத் திருமணம் செய்துகொள்ளும்படி அவரிடம் கூறியுள்ளார். இதற்கு முத்து லட்சுமியும் சம்மதித்தார்.

இதையடுத்து பாலசுப்பி ரமணியும், முத்துலட்சுமியும் செல் போனில் பேசி வந்துள்ளனர்.

இதைப் பயன்படுத்தி, ஏராள மான பணம் மற்றும் 45 பவுன் நகைகளை முத்துலட்சுமி பால சுப்பிரமணியத்திடம் இருந்து பெற் றுள்ளார்.

இந்நிலையில் தான் வேறு ஒருவரைக் காதலிப்பதாகக்கூறி திருமணத்துக்கு முத்துலட்சுமி திடீரென மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலசுப் பிரமணி, ஊர் திரும்பியவுடன் தான் கொடுத்த ரூ.1.27 கோடி மற்றும் 45 பவுன் நகைகளைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். இதைத் தரமறுத்து அறிவழகன், அவரது அண்ணன் கண்ணன் ஆகியோர் பாலசுப்பிரமணியை மிரட்டினர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் பாலசுப்பிரமணி புகார் செய்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், ஆறு பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். இதில் அறிவழகன்(35), அவரது மனைவி கலைச்செல்வி(30), முத்துலட்சுமி(25) ஆகிய 3 பேரை யும் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in