

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| ராஜாசேகர் | அதிமுக |
| தங்கம் தென்னரசு | திமுக |
| கே.கே.சிவசாமி | அமமுக |
| முருகன் | மக்கள் நீதி மய்யம் |
| ஜெ.ஆனந்த ஜோதி | நாம் தமிழர் கட்சி |
விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியும் ஒன்று. இது இளமையான தொகுதியும்கூட. காரணம், கடந்த 2006ல் நடந்த தொகுதி மறுசீரமைப்பில் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து திருச்சுழி சட்டமன்றத் தொகுதி தனியாக பிரிக்கப்பட்டது. ரமண மகரிஷி பிறந்த சிறப்புக்குரியது திருச்சுழி. இத்தொகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும் மழையை நம்பித்தான் உள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் வறட்சி பகுதிகளில் திருச்சுழியும் ஒன்றானது. விவசாயம் தவிர கரிமூட்டம் போடுவதும் இத்தொகுதியின் முக்கியத் தொழில்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முக்குலத்தோர், ரெட்டியார் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி ஒன்றியங்களையும், குலசேகரநல்லூர், மாங்குளம், மேலகண்டமங்கலம், குருணைக்குளம், ஆலடிப்பட்டி, பொம்மக்கோட்டை உள்ளிட்ட 40 வருவாய் கிராமங்கள் உள்ளன. கம்பக்குடி நிலையூர் வாய்க்கால்த் திட்டம், சென்னம்பட்டி கால்வாய்த் திட்டம், அரசு பேருத்துக் கழக டெப்போ அமைப்பது, அரசு கலைக்கல்லூரி போன்றவை இத்தொகுதியின் நீண்டநாள் கோரிக்கைகள்.
திருச்சுழி தனித் தொகுதியாக பிரிக்கப்பட்டது முதல் 2006, 2011, 2016 ஆகிய 3 தேர்தல்களிலும் திமுகவின் தங்கம்தென்னரசே வெற்றிபெற்றுள்ளார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
காரியாபட்டி தாலுகா, திருச்சூழி தாலுகா, அருப்புக்கோட்டை தாலுகா(பகுதி) குலசேகரநல்லூர், மாங்குளம், மேலகண்டமங்கலம், குருணைக்குளம், கொங்கணக்குறிச்சி, ஆலடிபட்டி, பொம்மக்கோட்டை, கல்லூரணி, சவ்வாஸ்புரம், குல்லம்பட்டி, முத்துராமலிங்கபுரம், நார்த்தம்பட்டி, காளையார்கரிசல்குளம்,கல்யாணசுந்தரபுரம், கல்லுமடம், எறசின்னம்பட்டி, பரட்டநத்தம்,தம்மநாயக்கண்பட்டி, வேடநத்தம், சிலுக்கபட்டி, மண்டபசாலை, மறவர்பெருங்க்குடி, தும்முசின்னம்பட்டி, திருமலைபுரம், சலுக்குவார்பட்டி, கத்தமடம், தொப்பலாக்கரை, இராஜகோபாலபுரம், புல்லாநாயக்கன்பட்டி, செட்டிக்குளம், கணக்கை, பரனச்சி, மேலையூர், வடக்குநத்தம், தெற்குநத்தம், செங்குளம், பூலாங்கால், கள்ளக்கறி, புரசலூர் மற்றும் கீழ்க்குடி கிராமங்கள்.
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | கே.தினேஷ்பாபு | அதிமுக |
| 2 | த.தங்கம்தென்னரசு | திமுக |
| 3 | தி.ராஜு | தேமுதிக |
| 4 | ஆ.முனியசாமி | பாமக |
| 5 | பா.ரவிராஜன் | பாஜக |
| 6 | க.பழனிச்சாமி | நாம் தமிழர் |
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1.06,179 |
| பெண் | 1,09,933 |
| மூன்றாம் பாலினத்தவர் | 10 |
| மொத்த வாக்காளர்கள் | 2,16,122 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | தங்கம் தென்னரசு | திமுக | 81613 |
| 2 | இசக்கி முத்து | அதிமுக | 61661 |
| 3 | விஜய ரகுநாதன்.P | பாஜக | 1998 |
| 4 | ராமமூர்த்தி.A | சுயேச்சை | 1103 |
| 5 | ஆறுமுகம்.M | பகுஜன் சமாஜ் கட்சி | 1082 |
| 6 | ராஜகோபலன்.R | சுயேச்சை | 726 |
| 7 | மன்னன்.K | சுயேச்சை | 637 |
| 8 | மருதமுத்து.B | சுயேச்சை | 595 |
| 9 | சதீஷ்குமார்.R | சுயேச்சை | 255 |
| 10 | பெரியசாமி.A | சுயேச்சை | 173 |
| 11 | பாக்யலட்சுமி மனோகரன். | சுயேச்சை | 162 |
| 12 | சின்னகருப்பன்.S | சுயேச்சை | 141 |
| 150146 |