

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| டி கே ராஜா (பாமக) | அதிமுக |
| எ.நல்லதம்பி | திமுக |
| ஞானசேகர் | அமமுக |
| மா.சுமதி | நாம் தமிழர் கட்சி |
திருப்பத்தூர் புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதால் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. மக்களவை தொகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தை உள்ளடக்கியதாக திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதி உள்ளது. இங்கு, 1 நகராட்சி, 2 ஒன்றியங்கள், 39 ஊராட்சிகள் உள்ளன. அரசியல் கட்சியின் வெற்றி, தோல்வியை வன்னியர் மற்றும் முதலியார் சமூகத்தினர் நிர்ணயிக்கின்றனர். அதேபோல, இஸ்லாமியர்களும், எஸ்சி/எஸ்டி சமூகத்தினரும் கணிசமாக உள்ளனர்.
இத்தொகுதியில் ஜவ்வாதுமலை, லக்கிநாயக்கன்பட்டி, பொம்மிக்குப்பம், பேராம்பட்டு, கொரட்டி, சுந்தரம்பள்ளி, குரும்பேரி, பெரிய கண்ணாலம்பட்டி, குனிச்சி, சிம்மணபுதூர், செவ்வாத்தூர், சிங்காரப்பேட்டை, விஷமங்கலம், வெங்கடாபுரம், மாடப்பள்ளி, மட்றப்பள்ளி, பள்ளிப்பட்டு, ஆதியூர், நரியநேரி, கசிநாயக்கன்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வாக்குப்பதிவு அதிகம் நடைபெறும் கிராமங்களாக கருதப்படுகிறது.
கடந்த 1951-ம் ஆண்டு முதல் திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக 8-ம் முறையும், அதிமுக, காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகள் தலா 2 முறையும், சுயேட்சை வேட்பாளர் ஒரு முறை தொகுதியை கைப்பற்றியுள்ளனர். பொருளாதார ரீதியாக பின்தங்கிய தொகுதியாக திருப்பத்தூர் கருதப்படுகிறது.
இருப்பினும், தற்போது புதிய மாவட்டத்தின் தலைநகரமாக திருப்பத்தூர் உருவெடுத்தப்பிறகு பல்வேறு தொழில் வளர்ச்சி, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் காலூன்ற தொடங்கியுள்ளதால் பொருளாதார ரீதியாக திருப்பத்தூர் தொகுதி வளர்ச்சியை நோக்கி செல்கிறது என்றே கூறலாம்.
ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் அதாவது 1911-ம் ஆண்டு சுமார் 100 ஏக்கர் இடப்பரப்பில் சார் ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, வனத்துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாவட்ட கல்வி அலுவலகம், அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் என அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் இயங்கி வருகிறது.
இது தவிர, திருப்பத்தூர் தொகுதியில் ஏழைகளில் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை, ஜவ்வாதுமலை, கிழக்கு தொடர்ச்சி மலைகள் இத்தொகுதியை யொட்டி அமைந்துள்ளது. திருப்பத்தூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை கடந்த 2019-ம் ஆண்டு நிறைவேறியுள்ளது.
கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தை யொட்டி திருப்பத்தூர் தொகுதி அமைந்துள்ளதால் இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது பேசும் மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.
திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை, மாவட்ட அந்தஸ்துள்ள அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும், போக்கு வரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 4 வழிச்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்டவை தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
2016 தேர்தல்
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் டி.டி.குமாரும், திமுக சார்பில் நல்லதம்பியும், பாஜக சார்பில் கோவிந்தராஜனும், தேமுதிக சார்பில் ஹரிகிருஷ்ணனும், பாமக சார்பில் டி.கே.ராஜாவும் போட்டியிட்டனர்.
இதில், திமுக வேட்பாளர் நல்லதம்பி 80,791 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். அதற்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் டி.டி.குமார் 73,144 வாக்குகளும், பாமக வேட்பாளர் டி.கே.ராஜா 12,227 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஹரிகிருஷ்ணன் 3,968 வாக்குகளும், பாஜக வேட்பாளர் கோவிந்தராஜன் 1,831 வாக்களும் பெற்றனர். நோட்டாவில் 1,193 வாக்குகள் பதிவானது.
கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாமக வேட்பாளர் டி.கே.ராஜாவும், 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.ஜி.ரமேஷ் வெற்றிப்பெற்றனர்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 4,73,591 |
| பெண் | 4,87,195 |
| மூன்றாம் பாலினத்தவர் | 72 |
| மொத்த வாக்காளர்கள் | 9,60,858 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | டி.டி.குமார் | அதிமுக |
| 2 | ஏ.நல்லதம்பி | தி.மு.க |
| 3 | எம்.கே.அரிகிருஷ்ணன் | தேமுதிக |
| 4 | டி.கே.ராஜா | பாமக |
| 5 | கோவிந்தராஜன் | பாஜக |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2006 )
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | ஆண்டு |
| 1951 | ஈ. எல். இராகவ முதலியார் | சுயேச்சை | 20918 | 48.75 | 1951 |
| 1957 | ஆர். சி. சமண்ண கவுண்டர் | காங்கிரஸ் | 18618 | 64 | 1957 |
| 1962 | கே. திருப்பதி கவுண்டர் | திமுக | 32400 | 62.38 | 1962 |
| 1967 | சி. கவுண்டர் | திமுக | 32589 | 49.8 | 1967 |
| 1971 | ஜி. இராமசாமி | திமுக | 37120 | 55.54 | 1971 |
| 1977 | பி. சுந்தரம் | திமுக | 19855 | 27.29 | 1977 |
| 1980 | பி. சுந்தரம் | திமுக | 42786 | 54.74 | 1980 |
| 1984 | ஒய். சண்முகம் | காங்கிரஸ் | 46884 | 49.02 | 1984 |
| 1989 | பி. சுந்தரம் | திமுக | 40998 | 35.92 | 1989 |
| 1991 | எ. கே. சி. சுந்தரவேல் | அதிமுக | 69402 | 62.24 | 1991 |
| 1996 | ஜி. சண்முகம் | திமுக | 66207 | 53.44 | 1996 |
| 2001 | டி. கே. இராசா | பாமக | 59840 | 46.15 | 2001 |
| 2006 | டி. கே. இராசா | பாமக | 71932 | --- | 2006 |
| ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
| 1951 | ஆர். சி. சமண்ண கவுண்டர் | காங்கிரஸ் | 15901 | 37.06 |
| 1957 | நடேச பிள்ளை | சுயேச்சை | 6609 | 22.72 |
| 1962 | ஆர். சி. சமண்ண கவுண்டர் | காங்கிரஸ் | 19540 | 37.62 |
| 1967 | சண்முகம் | காங்கிரஸ் | 30512 | 46.62 |
| 1971 | ஒய். சண்முகம் | ஸ்தாபன காங்கிரஸ் | 29720 | 44.46 |
| 1977 | கே. ஜெயராமன் | அதிமுக | 18857 | 25.92 |
| 1980 | ஜி. இராமசாமி | அதிமுக | 34682 | 44.37 |
| 1984 | பி. சுந்தரம் | திமுக | 28781 | 30.09 |
| 1989 | எசு. பி. மணவாளன் | காங்கிரஸ் | 27541 | 24.13 |
| 1991 | பி. சுந்தரம் | திமுக | 33498 | 30.04 |
| 1996 | பி. ஜி. மணி | அதிமுக | 34549 | 27.89 |
| 2001 | எசு. அரசு | திமுக | 54079 | 41.7 |
| 2006 | கே. சி. அழகிரி | மதிமுக | 58193 | --- |
| 2006 சட்டமன்ற தேர்தல் | 50. திருபத்த்துர் | ||
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | T.K. ராஜா | பாமக | 71932 |
| 2 | C. அழகிரி | ம.தி.மு.க | 58193 |
| 3 | B.S. செந்தில்குமார் | தே.மு.தி.க | 9435 |
| 4 | D. சிவசண்முகம் | பிஜேபி | 2229 |
| 5 | D.N. அமுதநாதன் | சுயேச்சை | 1718 |
| 6 | E. மணி | சுயேச்சை | 1297 |
| 7 | H. கோபிநாதன் | எஸ்.பி | 1026 |
| 8 | T.R. சரவணன் | பிஎஸ்பி | 897 |
| 9 | N. சேகர் | சுயேச்சை | 625 |
| 10 | P. தங்கராஜ் | சுயேச்சை | 412 |
| 147764 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
| 2011 சட்டமன்ற தேர்தல் | 50. திருபத்த்துர் | ||
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | K.G. ரமேஷ் | அ.தி.மு.க | 82895 |
| 2 | S. ராஜேந்திரன் | தி.மு.க | 61103 |
| 3 | M. செல்வகுமார் | பிஎஸ்பி | 1087 |
| 4 | D. குபேந்தரன் | சுயேச்சை | 1006 |
| 5 | K. வெங்கடேசன் | சுயேச்சை | 843 |
| 6 | K. காமராஜ் | ஐ.ஜே.கே | 740 |
| 7 | T.P.ஆசைதம்பி | பிஎஸ்பி | 543 |
| 8 | T.P. ரமேஷ் | சுயேச்சை | 442 |
| 9 | S. சங்கர் | சுயேச்சை | 382 |
| 10 | K.V. ரமேஷ் | சுயேட்சை | 288 |
| 11 | M. திருமால் | எல்.எஸ்.பி | 278 |
| 12 | M. முண்ணா | சுயேச்சை | 262 |
| 153391 |