

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| சிறுணியம் பலராமன் | அதிமுக |
| துரை சந்திரசேகர் (காங்கிரஸ்) | திமுக |
| பொன் ராஜா | அமமுக |
| டி.தேசிங்கு ராஜன் | மக்கள் நீதி மய்யம் |
| அ.மகேஷ்வரி | நாம் தமிழர் கட்சி |
வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள பொன்னேரி தொகுதியில், பொன்னேரி வட்டத்தின் பெரும்பகுதிகள் அடங்கியுள்ளன. இத்தொகுதியில் இரு முறை வென்ற திமுகவைச் சேர்ந்த கே.சுந்தரம் பால்வளத் துறை அமைச்சர் பதவி வகித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி தொகுதிகள், சென்னை மாவட்டம், ஆந்திர மாநிலம் என, பொன்னேரி தொகுதியின் எல்லைகள் அமைந்துள்ளன. இத்தொகுதியில், கடந்த நவம்பர் (2020) 16-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி, ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 289 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 663 பெண் வாக்காளர்கள், 58 இதர வாக்காளர்கள் என, மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 10 வாக்காளர்கள் உள்ளனர்.
இத்தொகுதியில் போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் விட்டுப்போன வரலாற்றுச் சுவடுகள் மற்றும் வங்காள விரிகுடாவின் முகத்துவாரம், பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவை கொண்ட பழவேற்காடு, மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான காமராஜர் துறைமுகம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் சமையல் எரிவாயு நிரப்பும் மையம், வல்லூர், வடசென்னை அனல்மின் நிலையங்கள், தனியார் கப்பல் கட்டும் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் நிரம்பியுள்ளன.
வாழை மற்றும் பூக்கள், நெல் சாகுபடி என தொடரும் விவசாயம் மற்றும் மீன் பிடித்தொழில் பொன்னேரி தொகுதியின் பிரதான தொழில்களாக விளங்குகின்றன.
இத்தொகுதியில் தலித், வன்னியர், மீனவர்கள் மற்றும் தெலுங்கு மொழி பேசும் நாயுடு உள்ளிட்ட சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர்.
பொன்னேரி தொகுதியில் அனல்மின் நிலையம் உள்ளிட்ட அரசு திட்டங்களுக்காக தங்கள் விளைநிலங்களை அளித்தவர்களில் பலர், உரிய வாழ்வாதாரம் இல்லாமல் தவிப்பது, அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பல்களால், பல விளைநிலங்கள் மாயமாகி வருவதும், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதும் இத்தொகுதியின் நெடுநாளைய பிரச்சினைகளாக உள்ளன.
இத்தொகுதியில், கடந்த 1951 முதல் 2016 வரை நடந்த 15 தேர்தல்களில், 7 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும், இரு முறை காங்கிரஸும், ஒரு முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஒரு முறை கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இதில், 2016-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக வேட்பாளர் ப.பலராமன் 95,979 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் கே.பரிமளம் 76,643 வாக்குகள் பெற்று, தோல்வியடைந்தார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,27,289 |
| பெண் | 1,32,663 |
| மூன்றாம் பாலினித்தவர் | 58 |
| மொத்த வாக்காளர்கள் | 2,60,010 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | ப.பலராமன் | அதிமுக |
| 2 | டாக்டர் கே.பரிமளம் | திமுக அணி |
| 3 | வே.செந்தில்குமார் | விசிக |
| 4 | அ.பாண்டியன் | பாமக |
| 5 | கி.கணேசன் | பாஜக |
| 6 | சே.வினோத்பாபு | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கும் பகுதிகள்
பொன்னேரி வட்டம், பூங்குளம், எஞ்சூர், செலியம்பேடு, மாங்கோடு, கீரப்பாக்கம், கள்ளூர், அண்ணாமலைச்சேரி, பெரியவேப்பத்தூர், உப்பு நெல்வயல், அகரம், தேவம்பட்டு, கங்காணிமேடு, உமிபேடு, செகண்யம், பெரிய கரும்பூர், பனப்பாக்கம், குமரஞ்சேரி, இலுப்பாக்கம், கோளூர், சிறுளப்பாக்கம், அவுரிவாக்கம், கனவண்துறை, பாக்கம், திருப்பாலைவனம், பூவாமி, வேம்பேடு, ஆவூர், விடதண்டலம், சோம்பட்டு, பரணம்பேடு, கிளிக்கோடி, காட்டாவூர், மேதூர், ஆசனம்புதூர், வஞ்சிவாக்கம், பிரளயம்பாக்கம், ஆண்டார்மடம், பழவேற்காடு, தாங்கல்பெரும்பலம், சிறுபழவேற்காடு, கடம்பாக்கம், தத்தமஞ்சி, பெரும்பேடு, சின்னக்காவனம், கூடுவாஞ்சேரி, கனகவல்லிபுரம், திருப்பேர், எலியம்பேடு, லிங்கிபையன்பேட்டை, சோமஞ்சேரி, அதமனன்சேரி, சிறுளப்பன்சேரி, காட்டூர், கருங்காலி, களஞ்சி, காட்டுப்பள்ளி, வயலூர், திருவெள்ளைவாயல், ஏரிப்பள்ளிக்குப்பம், வேளுர், ஆலாடு, குமரசிறுளகுப்பம், கணியம்பாக்கம், கடமஞ்சேரி, தினைப்பாக்கம், மெரட்டூர், தேவதானம், தடப்பெரும்பாக்கம், வைரவன்குப்பம், பேரவள்ளூர், துறைநல்லூர், வடக்குநல்லூர், செவிட்டுபனபாக்கம், போந்தவாக்கம், மாதவரம், மில்லியன்குப்பம், சின்னம்பேடு, கீல்மேனி, தச்சூர், அனுப்பம்பட்டு, வெள்ளம்பாக்கம், தோட்டக்காடு, கல்பாக்கம், நெய்தவாயல், நாலூர், வன்னிப்பாக்கம், ஆமூர், பஞ்செட்டி, ஆதம்பாக்கம், நத்தம், எர்ணாவாக்கம், பாண்டிகவனூர், ஜெகநாதபுரம், நந்தியம்பாக்கம், புழுவேதிவாக்கம், வல்லூர், சீமாபுரம், மடியூர், வழுதிகைமேடு, ஞாயிறு, மாஃபூஸ்கான்பேட்டை, புதுப்பாக்கம், பெரியமுல்லைவாயல், சின்னமுல்லைவாயல், திருநிலை, கோடிப்பள்ளம், அருமந்தை, விச்சூர், வெள்ளிவாயல், இடையன்சாவடி, அரசூர், அப்பளாவரம் மற்றும் ஆண்டவாயல் கிராமங்கள்.
ஆரணி பேருராட்சி, பொன்னேரி பேருராட்சி, மீஞ்சூர் பேருராட்சி, அத்திப்பட்டு நகரம்.
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
பொன்னேரி சட்டமன்ற தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 – 2011 )
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
| 1951 | ஒ. செங்கம் பிள்ளை | கிசான் மஜ்தூர் பிரஜா கட்சி | 27489 | 27.67 |
| 1957 | வி. கோவிந்தசாமி நாயுடு | காங்கிரஸ் | 32119 | 25.94 |
| 1962 | டி. பி. ஏழுமலை | காங்கிரஸ் | 26125 | 48.41 |
| 1967 | பி. நாகலிங்கம் | திமுக | 37746 | 56.61 |
| 1971 | பி. நாகலிங்கம் | திமுக | 39783 | 58.39 |
| 1977 | எஸ். எம். துரைராஜ் | அதிமுக | 31796 | 42.64 |
| 1980 | ஆர். சக்கரபாணி | அதிமுக | 42408 | 51.07 |
| 1984 | சேகர் என்கிற கே. பி. குலசேகரன் | அதிமுக | 61559 | 59.05 |
| 1989 | கே. சுந்தரம் | திமுக | 51928 | 44.53 |
| 1991 | இ. இரவிக்குமார் | அதிமுக | 77374 | 64.74 |
| 1996 | கே. சுந்தரம் | திமுக | 87547 | 61.72 |
| 2001 | ஏ. எஸ். கண்ணன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 81408 | 54.58 |
| 2006 | பி. பலராமன் | அதிமுக | 84259 | --- |
| 2011 | பொன். ராசா | அதிமுக | 93649 | -- |
| 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
| கணபதி ரெட்டியார் | கிசான் மஜ்தூர் பிரஜா கட்சி | 25626 | 25.79 |
| டி. பி. ஏழுமலை | காங்கிரசு | 31392 | 25.35 |
| பி. நாகலிங்கம் | திமுக | 15721 | 29.13 |
| டி. பி. ஏழுமலை | காங்கிரஸ் | 27751 | 41.62 |
| டி. பி. ஏழுமலை | நிறுவன காங்கிரஸ் | 21650 | 31.77 |
| ஜி. வெற்றிவீரன் | திமுக | 20524 | 27.53 |
| பி. நாகலிங்கம் | திமுக | 27490 | 33.11 |
| கே. சுந்தரம் | திமுக | 41655 | 39.96 |
| கே. தமிழரசன் | அதிமுக (ஜெ) | 44321 | 38.01 |
| கே. பார்த்தசாரதி | திமுக | 36121 | 30.22 |
| ஜி. குணசேகரன் | அதிமுக | 42156 | 29.72 |
| கே. சுந்தரம் | திமுக | 54018 | 36.22 |
| வி. அன்பு வாணன் | திமுக | 73170 | |
| ஏ. மணிமேகலை | திமுக | 62576 | -- |
2006 – தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | பி.பலராமன் | அதிமுக | 84259 |
| 2 | வி.அன்புவண்ணன் | திமுக | 73170 |
| 3 | எஸ்.அங்கமுத்து | தேமுதிக | 13508 |
| 4 | இ.மணி | சுயேச்சை | 1649 |
| 5 | சி.ஜானகிராமன் | சிபிஐ (எம்-எல்) | 1185 |
| 6 | எஸ்.நடராஜன் | பிஎஸ்பி | 865 |
| 7 | கே.ஏழுமலை | சுயேச்சை | 593 |
| 175229 |
20 11 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | பொன் ராஜா | அதிமுக | 93624 |
| 2 | மணி மேகலை | திமுக | 62354 |
| 3 | S.ராஜா | பிஎஸ்பி | 1347 |
| 4 | K.கணேசன் | பிஜேபி | 1335 |
| 5 | ஜெயகாந்தன் | சுயேச்சை | 1167 |
| 6 | N.பிரபாகரன் | பு பா | 754 |
| 7 | K.ரகுபதி | சுயேச்சை | 637 |
| 8 | E.பழனி | சுயேச்சை | 636 |
| 9 | M.தேவேந்திரன் | சுயேச்சை | 420 |
| 10 | S.ரகுபதி | சுயேச்சை | 319 |
| 11 | J .S .கனி முத் து | சுயேச்சை | 242 |
| 162835 |