

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| மாதவரம் ஏ.மூர்த்தி | அதிமுக |
| எஸ் .சுதர்சனம் | திமுக |
| தட்சிணாமூர்த்தி | அமமுக |
| ரமேஷ் கொண்டலசாமி | மக்கள் நீதி மய்யம் |
| இரா.ஏழுமலை | நாம் தமிழர் கட்சி |
தொகுதி மறுசீரமைப்பில் 2011 சட்டப்பேரவை தேர்தலின் போது உருவாக்கப்பட்ட தொகுதி மாதவரம். இத்தொகுதி, சென்னை மாநகராட்சி பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளைக் கொண்டது.
மாதவரம் தொகுதியில், கடந்த நவம்பர் (2020) 16-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி, 2 லட்சத்து 16 ஆயிரத்து 68 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 17 ஆயிரத்து 719 பெண் வாக்காளர்கள்,96 இதர வாக்காளர்கள் என மொத்தம் 4 லட்சத்து 33 ஆயிரத்து 883 வாக்காளர்கள் உள்ளனர்.
இத்தொகுதியில், சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான புழல் ஏரி, சோழவரம் ஏரி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், புழல் மத்திய சிறைச்சாலை, மாதவரம் பால்பண்ணை மற்றும் சுமார் 100 அரிசி ஆலைகள், சேமிப்புக் கிடங்குகள் உள்ளன.
மாதவரம் தொகுதியில், ரெட்டியார், யாதவர், தலித் சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர்.
இத்தொகுதியில், செங்குன்றம், ஜி.என்.டி., சாலையில், அரிசி ஆலைகளுக்கு வரும் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், நிலத்தடி நீர் திருட்டு, மாநகராட்சி பகுதிகளுக்கு வராத பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டம் உள்ளிட்டபிரச்சினைகள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன.
மாதவரம் தொகுதியில், கடந்த 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் (முன்னாள் பால்வளத் துறை அமைச்சர்) வி.மூர்த்தி, ஒரு லட்சத்து 15 ஆயிரத்து, 468 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் என்.எஸ். கனிமொழி 80 ஆயிரத்து 703 வாக்குகள் பெற்று, தோல்வியை தழுவினார்.
2016 தேர்தலில் திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம் ஒரு லட்சத்து 22ஆயிரத்து 82 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் து.தட்சணாமூர்த்தி ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 829 வாக்குகள் பெற்று, வெற்றி வாய்ப்பை இழந்தார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 2,16,068 |
| பெண் | 2,17,719 |
| மூன்றாம் பாலினத்தவர் | 96 |
| மொத்த வாக்காளர்கள் | 4, 33,883 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | து.தஷ்ணாமூர்த்தி | அதிமுக |
| 2 | எஸ். சுதர்சனம் | திமுக |
| 3 | ஏ.எஸ்.கண்ணன் | இந்திய கம்யூ. |
| 4 | கோ.இரவிராஜ் | பாமக |
| 5 | ஆர்.எம்.ஆர். ஜானகிராமன் | பாஜக |
| 6 | இரா.ஏழுமலை | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
அம்பத்தூர் வட்டம் கீழ்கொண்டையூர், ஆலந்தூர், பாண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், மோரை, மேல்பாக்கம், கதவூர், வெள்ளச்சேரி, பாலவேடு, வெள்ளானூர், பொத்தூர், பம்மதுகுளம், தீர்க்ககிரியம்பட்டு, பாலவயல், விளாங்காடு பாக்கம், சிறுகாவூர், அரியலூர், கடப்பாக்கம், சடையன்குப்பம், எலந்தஞ்சேரி, மாத்தூர், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், செட்டி மேடு, வடம்பெரும்பாக்கம், லயன், கிராண்ட் லயான், அழிஞ்சிவாக்கம், அத்திவாக்கம்ம், வடகரை, சூரப்பட்டு, கதிர்வேடு மற்றும் புத்தகரம் கிராமங்கள்.
நாரவாரிக்குப்பம் பேரூராட்சி, புழல் பேரூராட்சி மற்றும் மாதவரம் நகராட்சி.
பொன்னேரி வட்டம் நெற்குன்றம், செக்கஞ்சேரி, சூரப்பட்டு, சோத்துபெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், புது எருமை, வெட்டிப்பாளையம், பழைய எருமைவெட்டிப்பாளையம், சோழவரம், ஒரக்காடு, புதூர், கண்டிகை, மாரம்பேடு, கும்மனூர், ஆங்காடு, சிருணியம், செம்புலிவரம், நல்லூர், அலமாதி, ஆட்டந்தாங்கல், விஜயநல்லூர் மற்றும் பெருங்காவூர் கிராமங்கள்.
பாடியநல்லூர் .
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி | வாக்குகள் |
| 1 | மூர்த்தி | அதிமுக | 115468 |
| 2 | கனிமொழி | திமுக | 80703 |
| 3 | சிவகுமார் | பிஜேபி | 2599 |
| 4 | குமரன் | சுயேச்சை | 2135 |
| 5 | ரமேஷ் | பு பா | 1964 |
| 6 | ஜானகிராமன் | பிஎஸ்பி | 1280 |
| 7 | சீனிவாசன் | ஜே எம் எம் | 978 |
| 8 | ராஜ் | சுயேச்சை | 872 |
| 9 | ஜானகிராமன் | சிபிஐ எம்எல் | 408 |
| 10 | நந்தகுமார் | சுயேச்சை | 360 |
| 11 | மேகநாதன் | சுயேச்சை | 233 |
| 12 | செந்தில்குமார் | சுயேச்சை | 193 |