

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| ப. தனபால் | அதிமுக |
| அதியமான் ராஜூ | திமுக |
| எஸ்.மீரா | அமமுக |
| ஏ. வெங்கடேஸ்வரன் | மக்கள் நீதி மய்யம் |
| கோ.சோபா | நாம் தமிழர் கட்சி |
திருப்பூர் மாவட்டத்தில் அதிக ஆண்டுகள் தனித் தொகுதியாக இருப்பது அவிநாசி சட்டப்பேரவை தொகுதி தான்.
அவிநாசி திருப்பூர் மாவட்டத்திலும், அன்னூர் கோவை மாவட்டத்திலும் உள்ளது. அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிகளவில் அருந்ததியர்கள் உட்பட ஆதி திராவிடர்கள் அதிகம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இரண்டாவது இடத்தில் கொங்கு வேளாளர்களும், அதற்கு அடுத்ததாக நாயக்கர் மற்றும் இதர வகுப்பினர்களும் வசித்து வருகின்றனர்.
கொங்கு மண்டலத்தில் உள்ள 7 சிவஸ்தலங்களில், பாடல் பெற்ற தலமாக, அவிநாசியில் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாலிங்கேஸ்வரர் கோயிலும், திருமுருகன்பூண்டி திருமுருநாதசாமி கோயிலும் பிரசித்தி பெற்றவையாக உள்ளன.
சிறப்பு வாய்ந்த திருமுருகன்பூண்டியை புரதான நகரமாக, தமிழக அரசு அறிவித்து சீரமைப்பு நிதியும் ஒதுக்கியது. அதேபோல், அன்னூரில் மன்னீஸ்வரர் கோயிலும் வெகு பிரசித்தம். மேற்கண்டவை இத்தொகுதியின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 31 ஊராட்சிகளும், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 16 ஊராட்சிகள் என, மொத்தம் 47 கிராம ஊராட்சிகளும், அவிநாசி, திருமுருகன்பூண்டி, அன்னூர் ஆகிய 3 பேரூராட்சிகளையும் உள்ளடக்கியது இந்தத் தொகுதி.
அவிநாசி வட்டத்தையும் உள்ளடக்கியது அவிநாசி சட்டப்பேரவை.
தொகுதி பிரச்சினைகள்
அவிநாசி வட்டாரத்தில் விவசாயம், விசைத்தறி, பம்பு செட் உற்பத்தி, உள்ளூர் பனியன் உற்பத்தி ஆகியவை பிரதானத் தொழிலாக உள்ளன. திருமுருகன்பூண்டியில் சிற்பக்கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். 60 ஆண்டு காலமாக தொகுதி மக்கள் எதிர்பார்த்த அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, முழுவீச்சில் பணிகள் நடைபெறுவது தொகுதி மக்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாகும். பெருந்துறை- அன்னூர் வரை உள்ள 600 குட்டைகள் விடுபட்டுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். இந்த திட்டத்திலேயே இதனையும் இணைக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.
திட்டம் முழுமை பெற்றால் மட்டுமே, கிராமங்களும் முழுமை பெறும் என்கின்றனர் தொகுதி மக்கள். அவிநாசி, அன்னூர் பகுதி மக்களுக்கு முக்கியமாக பவானி ஆற்றுக்குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் ஒதுக்கீடு செய்த அளவுக்கு குடிநீர் வருவதில்லை. அன்னூர்-அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், முடிவடையும் தருவாயில் இருப்பதால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும்.
மக்களின் எதிர்பார்ப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அரசு தொழில்நுட்பப் பயிற்சி கல்லூரியை தொகுதியில் ஏற்படுத்த வேண்டும். அவிநாசி ஊராட்சியை இரண்டாகப் பிரி்த்து, சேவூரை மையமாக வைத்து, தனி ஊராட்சி ஒன்றியம் அமைத்தல், சேவூரில் பேருந்து நிலையம், அவிநாசியை நகராட்சியாக்குதல், விசைத்தறி தொழிற்பேட்டை, புராதானக் கோயில் புனரமைப்பு, குளம், குட்டைகள் தூர்வாருதல் பணிகள் நடைபெறவில்லை என மக்களிடம் ஏமாற்றம் எஞ்சியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தலைவராக உள்ளவரின் தொகுதி என்பதால், கூடுதல் முக்கியத்துவம் இருக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். தட்டுபாடற்ற குடிநீருக்கும் சிரமப்பட வேண்டியிருப்பதாக கருதுகின்றனர் தொகுதி மக்கள்.
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | ப.தனபால் | அதிமுக |
| 2 | இ.ஆனந்தன் | திமுக |
| 3 | மா.ஆறுமுகம் | இந்தி கம்யூ |
| 4 | செ. பெருமாள் | பாஜக |
| 5. | கே.கே.மாரிமுத்து | பாமக |
| 6. | பி.சுமதி | நாம் தமிழர் |
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,23,382 |
| பெண் | 1,26,159 |
| மூன்றாம் பாலினத்தவர் | 15 |
| மொத்த வாக்காளர்கள் | 2,49,556 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
| 1957 | கே. மாரப்ப கவுண்டர் | காங்கிரஸ் | 20716 |
| 1962 | கே. மாரப்ப கவுண்டர் | காங்கிரஸ் | 27009 |
| 1967 | ஆர். கே. கவுண்டர் | சுதந்திரா | 31927 |
| 1971 | டி. ஓ. பெரியசாமி | சுயேச்சை | 29356 |
| 1977 | எஸ். என். பழனிசாமி | காங்கிரஸ் | 22550 |
| 1980 | எம். ஆறுமுகம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 33294 |
| 1984 | பி. லட்சுமி | அதிமுக | 58677 |
| 1989 | ஆர். அண்ணாநம்பி | அதிமுக (ஜெ) | 33964 |
| 1991 | எம். சீனியம்மாள் | அதிமுக | 69774 |
| 1996 | ஜி. இளங்கோ | திமுக | 66006 |
| 2001 | எசு. மகாலிங்கம் | அதிமுக | 59571 |
| 2006 | ஆர். பிரேமா | அதிமுக | 54562 |
| 2011 | கருப்புசாமி | அதிமுக | 103002 |
| ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
| 1957 | கருப்ப கவுண்டர் | சுயேச்சை | 13670 |
| 1962 | எம். பொன்னுசாமி | சுதந்திரா | 12196 |
| 1967 | கே. எம். கவுண்டர் | காங்கிரஸ் | 26808 |
| 1971 | கே. தங்கவேலு | திமுக | 28637 |
| 1977 | ஆர். அண்ணாநம்பி | அதிமுக | 20803 |
| 1980 | எஸ். என். பழனிசாமி | காங்கிரஸ் | 23623 |
| 1984 | எம். ஆறுமுகம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 24504 |
| 1989 | சி. டி. தண்டபாணி | திமுக | 31806 |
| 1991 | எம். ஆறுமுகம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 23625 |
| 1996 | எம். தியாகராசன் | அதிமுக | 39549 |
| 2001 | எம். மோகன் குமார் | சுயேச்சை | 38559 |
| 2006 | ஆறுமுகம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 50023 |
| 2011 | ஏ.ஆர்.நடராஜன் | காங்கிரஸ்ி | 61831 |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | பிரேமா.R | அதிமுக | 54562 |
| 2 | ஆறுமுகம்.M | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 50023 |
| 3 | ஆனந்தராஜ்.M | தேமுதிக | 14570 |
| 4 | மோகன்ராஜ்.M | சுயேச்சை | 11146 |
| 5 | ராமசாமி.P | பகுஜன் சமாஜ் கட்சி | 1535 |
| 6 | நைனன்.K | சுயேச்சை | 1021 |
| 7 | ரவிராஜ்.M.R | சமாஜ்வாதி கட்சி | 684 |
| 8 | செல்லதுரை.P | சுயேச்சை | 542 |
| 9 | கணேசன்.A | சுயேச்சை | 393 |
| 134476 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | கருப்புசாமி.M.A | அதிமுக | 103002 |
| 2 | நடராஜன்.A.R | காங்கிரஸ் | 41591 |
| 3 | ரங்கசாமி.R | பாஜக | 5405 |
| 4 | ஜெயா.V | சுயேச்சை | 2798 |
| 5 | மூர்த்தி.R | சுயேச்சை | 1858 |
| 154654 |