

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| குணசேகரன் | அதிமுக |
| செல்வராஜ் | திமுக |
| விசாலாட்சி | அமமுக |
| அனுஷா ரவி | மக்கள் நீதி மய்யம் |
| க.சண்முகசுந்தரம் | நாம் தமிழர் கட்சி |
தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசையில் 114-வது இடத்தில் உள்ளது திருப்பூர் தெற்கு தொகுதி. இந்தியாவின் பெருமைமிகு பின்னலாடை நகரின் பெரும்பாலான பகுதிகள் இருப்பது, திருப்பூர் தெற்கு தொகுதியில் தான்.
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் உருவானது இந்த திருப்பூர் தெற்கு தொகுதி. திருப்பூர் மாநகராட்சியின் 21 வார்டுகள் முழுமையாக இத்தொகுதியில் உள்ளன. தவிர, திருப்பூர் புறநகர் பகுதிகளும், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குள் தான் வருகின்றன. மாவட்டத்தின் மையப்பகுதியாக அமைந்துள்ள இத்தொகுதியில், பனியன் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் அதை சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ளன. தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் முக்கிய களமாக இத்தொகுதி உள்ளன.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி அலுவலகம், ஆட்சியர் அலுவலகம், கல்லூரிகள், பெருமாள் கோயில் உள்ளிட்டவை இத்தொகுதியின் முக்கிய அடையாளங்கள் ஆகும். கொங்கு வேளாளர் அதிகளவில் இத்தொகுதியில் வசிக்கின்றனர். முதலியார், செட்டியார், ஆதிதிராவிடர்கள், இஸ்லாமியர், கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். தென்மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமானோர், தங்கி வேலை செய்யும் பகுதியாகவும் திருப்பூர் தெற்கு தொகுதி உள்ளது. இதில், 60 சதவீதத்தினருக்கும் அதிகமானோருக்கு வாக்குரிமையும் உள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
திருப்பூர் (மாநகராட்சி) வார்டு எண். 21 முதல் 52 வரை உள்ள பகுதிகள், எஸ். நல்லூர் (நகராட்சி) ஆகியவை உள்ளன.
தொகுதி பிரச்சினைகள்
தெற்கு தொகுதியில் பழைய பேருந்து நிலையம், பல்லடம், தாராபுரம் சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும்விதமாக, பறக்கும் மேம்பாலம் அமைக்கப்பட்டது. அது பொதுமக்களிடையே கவனம் பெறவில்லை. நகரின் உட்கட்டமைப்பு, முறையான குடிநீர் விநியோகம், சுகாதாரம், கொசு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள், பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருப்பது தொகுதிவாசிகளை கவலையடைய வைத்துள்ளது. இவைகளை களைய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், பாதாள சாக்கடைத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. போக்குவரத்துக்கு ஏற்ப சாலை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை, சாலைகளில் அடிக்கடி ஏற்படும் குண்டும் குழிகளை செப்பனிடாமல் இருப்பது. மழைகாலங்களில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகும் அளவிற்கு, படுமோசமான நகர கட்டமைப்பு. இவற்றால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
அதேபோல் மக்கள் நெருக்கம் நிறைந்த தொகுதி என்பதால், வாரக்கணக்கில் அள்ளப்படாத குப்பை, சாலைகளில் உடைந்து ஓடும் குழாய் நீர் என பல்வேறு பிரச்சினைகளை மக்கள் அடிக்கடி சந்திக்கின்றனர். திருப்பூர் வடக்கு தொகுதியைக் காட்டிலும், தெற்கு தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் அதிக அளவில் நடப்பது பெரும் ஆறுதல். தொகுதி உருவானதற்கு பின்பு நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, வெற்றி கண்டது. இத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக மறைந்த கே.தங்கவேல்(மா.கம்யூனிஸ்ட்) இருந்தார். அதன்பின்னர் கடந்த தேர்தலில் அதிமுகவின் முன்னாள் துணை மேயரான சு.குணசேகரன் வெற்றி பெற்று தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
‘
2016 தேர்தலில் களம் கண்ட வேட்பாளர்கள் விவரம்:
1. சு.குணசேகரன், அதிமுக, 73351.
2. க.செல்வராஜ், திமுக, 57418.
3. கே.தங்கவேல், மார்க்சிஸ்ட், 13597.
4. என். பாயிண்ட் மணி, பாஜக, 7640.
5. எஸ். மன்சூர் உசேன், பாமக, 1093.
6. க. சண்முகசுந்தரம், நாம் தமிழர், 2506.
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | சு.குணசேகரன் | அதிமுக |
| 2 | க.செல்வராஜ் | திமுக |
| 3 | கே.தங்கவேல் | மார்க்சிஸ்ட் |
| 4 | என். பாயிண்ட் மணி | பாஜக |
| 5 | எஸ். மன்சூர் உசேன் | பாமக |
| 6 | க. சண்முகசுந்தரம் | நாம் தமிழர் |
2021 ஜனவரி மாதம் வெளியிட்டப்பட்ட பட்டியலின் அடிப்படையில் திருப்பூர் தெற்கு தொகுதியில் உள்ள வாக்காளர்கள் விவரம்.
| ஆண் | 1,39,490, |
| பெண் | 1,36,036 |
| மூன்றாம் பாலினத்தவர் | 34 |
| மொத்த வாக்காளர்கள் | 2,75,560. |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
• திருப்பூர் (மாநகராட்சி) வார்டு எண். 21 முதல் 52 வரை
• எஸ். நல்லூர் (நகராட்சி
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | தங்கவேலு.K | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி | 75424 |
| 2 | செந்தில்குமார்.K | காங்கிரஸ் | 37121 |
| 3 | பாயின்ட் மணி.N | பாஜக | 4397 |
| 4 | முஹமத் அமானுல்லாஹ்.M | எஸ்டிபிஐ | 2645 |
| 5 | மஸ்வூத்.L.M | சுயேச்சை | 944 |
| 6 | பொன்னுசாமி.R | சுயேச்சை | 415 |
| 7 | பழனிசாமி.M.N | சுயேச்சை | 362 |
| 8 | சிவானந்தம்.K.R | இந்திய ஜனநாயக கட்சி | 361 |
| 9 | விக்டர்மனோவா. L | பகுஜன் சமாஜ் கட்சி | 227 |
| 10 | அஹ்மத் முஸ்தபா.M | சுயேச்சை | 215 |
| 11 | கிருஷ்ணசாமி.P | சுயேச்சை | 135 |
| 12 | சுரேஷ்குமார்.G | சுயேச்சை | 129 |
| 122375 |