

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| ராஜலெட்சுமி | அதிமுக |
| ஈ.ராஜா | திமுக |
| ஆர்.அண்ணாதுரை | அமமுக |
| பிரபு | மக்கள் நீதி மய்யம் |
| பி.மகேந்திரகுமாரி | நாம் தமிழர் கட்சி |
சங்கரன்கோவில் நகராட்சி, சங்கரன்கோவில் தாலுகாவில் ஒரு பகுதி மற்றும் 73 ஊராட்சிகள், திருவேங்கடம் பேரூராட்சியை உள்ளடக்கியது சங்கரன்கோவில் தொகுதி. நெசவாளர்கள் அதிகமுள்ள பகுதி சங்கரன்கோவில். இந்த தொகுதி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், தேவர், யாதவர் சமுதாயத்தினர் அதிகமாக உள்ளனர்.
தொகுதியின் பிரச்சினைகள்
சங்கரன்கோவில் தொகுதி முழுக்க வானம்பார்த்த பூமியாக இருக்கிறது. மழை மறைவு பிரதேசமாக இருப்பதால் விவசாயம் அருகி வருகிறது. வேலைவாய்ப்புகளுக்கு வழியில்லாமல் மக்கள் வேறுஇடங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். வாசுதேவநல்லூர் அருகே உள்ள செண்பகவல்லி அணை உடைப்பை சரி செய்தால் சங்கரன்கோவில் தொகுதியும் நீராதாரம் கிடைக்கப் பெற்று வளம் பெறும். சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் நிலவும் கடும் குடிநீர் பிரச்சினையும், சுகாதாரச் சீர்கேடு பிரச்சினைகள் மக்களை அவதியுறச் செய்கின்றன.
விசைத்தறி தொழிலாளர்களின் கூலியை உயர்த்த வேண்டும். ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும். வேலைவாய்ப்புகாக தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். சங்கரன்கோவில் பகுதியில் மலர் சாகுபடிக்கான ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரன்கோவிலில் நீண்ட காலமாக செயல்பாட்டுக்கு வராமல் இருக்கும் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவனையாக தரம் உயர்த்த வேண்டும் என பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் சங்கரன்கோவில் தொகுதி மக்கள் உள்ளனர்.
கடந்த 1952 முதல் 2016 வரை நடைபெற்ற 16 தேர்தல்களில் 9 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும், 3 முறை காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.
2016 தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ராஜலெட்சுமி 78751 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவருக்கு அடுத்தபடியாக திமுகவைச் சேர்ந்த அன்புமணி கணேசன் 64262 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்பிடித்தார்..
2006-ல் இத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.கருப்பசாமி வெற்றி பெற்றிருந்தார். 2011 தேர்தலிலும் அவரே அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் ஓராண்டிலேயே அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து 2012-ல் இத்தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.முத்துச்செல்வி வெற்றி பெற்றார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,14,124 |
| பெண் | 1,19,098 |
| மூன்றாம் பாலினத்தவர் | 5 |
| மொத்த வாக்காளர்கள் | 2,33,227 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2012 )
| ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
| 2012 இடைத்தேர்தல்* | எஸ்.முத்துசெல்வி | அதிமுக | |
| 2011 | சொ. கருப்பசாமி | அதிமுக | |
| 2006 | சொ. கருப்பசாமி | அதிமுக | 40.33 |
| 2001 | சொ. கருப்பசாமி | அதிமுக | 43.51 |
| 1996 | சொ. கருப்பசாமி | அதிமுக | 33.94 |
| 1991 | வி.கோபாலகிருஷ்ணன் | அதிமுக | 61.88 |
| 1989 | எஸ்.தங்கவேலு | திமுக | 43.99 |
| 1984 | எஸ்.சங்கரலிங்கம் | அதிமுக | 54.45 |
| 1980 | பி.துரைராஜ் | அதிமுக | 48.87 |
| 1977 | எஸ்.சுப்பய்யா | திமுக | 34.26 |
| 1971 | எஸ்.சுப்பய்யா | திமுக | |
| 1967 | பி.துரைராஜ் | திமுக | |
| 1962 | எஸ். எம். அப்துல் மஜீத் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1957 | ஏ.ஆர்.சுப்பய்யாமுதலியார் | காங்கிரஸ் | |
| ஊர்காவலன் | |||
| 1952 | ராமசுந்தரகருணாலயபாண்டியன் | சுயேட்சை/காங்கிரஸ் | |
| ஊர்காவலன் |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | C. கருப்புசாமி | அ.தி.மு.க | 50603 |
| 2 | S. தங்கவேலு | தி.மு.க | 46161 |
| 3 | A. கருப்புசாமி | பி.எஸ்.பி | 10015 |
| 4 | P. சுப்புலட்சுமி | எ.ஐ.எப்.பி | 9740 |
| 5 | K. முத்துகுமார் | தே.மு.தி.க | 5531 |
| 6 | K. சுப்புலட்சுமி | சுயேச்சை | 1351 |
| 7 | S. கனகராஜ் | எஸ்.பி | 1250 |
| 8 | S. கணேசன் | சுயேச்சை | 817 |
| 125468 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | C. கருப்புசாமி | அ.தி.மு.க | 72297 |
| 2 | M. உமாமகேஷ்வரி | தி.மு.க | 61902 |
| 3 | A. லக்ஷ்மிநாதன் | சுயேச்சை | 2198 |
| 4 | S. ரஜேந்திரன் | சுயேச்சை | 1917 |
| 5 | C. சாரதா | பாஜக | 1862 |
| 6 | P. சுப்புலட்சுமி | சுயேச்சை | 1210 |
| 7 | S. குணசீலன் | சுயேச்சை | 895 |
| 8 | குமார் (எ) படையப்பா | பி.எஸ்.பி | 815 |
| 9 | S. முருகன் | சுயேச்சை | 508 |
| 10 | S. மாரியப்பன் | சுயேச்சை | 288 |
| 11 | M. கோமதிநாயகம் | சுயேச்சை | 239 |
| 12 | M. மாடசாமி | சுயேச்சை | 181 |
| 13 | K. அய்யனார் | சுயேச்சை | 175 |
| 14 | G. ராஜன் | சுயேச்சை | 135 |
| 144622 |