

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| பரஞ்ஜோதி | அதிமுக |
| கதிரவன் | திமுக |
| தொட்டியம் ராஜசேகரன் | அமமுக |
| ஆர்.சாம்சன் | மக்கள் நீதி மய்யம் |
| வே.கிருஷ்ணசாமி | நாம் தமிழர் கட்சி |
திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையையொட்டி அமைந்துள்ளது இந்த தொகுதி. இந்த தொகுதியில்தான் தமிழகத்தின் புகழ்பெற்ற அம்மன் திருத்தலங்களில் முக்கியமான இடத்தை வகிக்கும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பில் முசிறி தொகுதியில் இருந்த சில பகுதிகளை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி இது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
இந்த தொகுதியில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் அனைத்து கிராம ஊராட்சிகள், முசிறி ஊராட்சி ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகள், மண்ணச்சநல்லூர் மற்றும் எஸ். கண்ணனூர் பேரூராட்சிகள் இந்த தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
மண்ணச்சநல்லூர் வட்டம்
முசிறி வட்டம்(பகுதி)
வேங்கைமண்டலம், மூவானூர், பெரமங்கலம், காட்டுக்குளம், கோமங்கலம், நெய்வேலி, திண்ணக்கோணம், அய்யம்பாளையம்,ஏவூர், கொடுந்துறை, சித்தாம்பூர், ஆமூர், குணசீலம், திருத்தலையூர், துறையூர், புதுப்பட்டி, கரட்டாம்பட்டி, திண்ணனூர், சுக்காம்பட்டி புலிவலம் திருத்திமலை மங்களம், திலையாநத்தம், ஜெயங்கொண்டம் (டி.புத்தூர்), பேரூர், வாளவந்தி (கிழக்கு) மண்பாறை மற்றும் வாளவந்தி (மேற்கு) கிராமங்கள்.
தொகுதி பிரச்சினைகள்
இந்த தொகுதிக்குட்பட்ட திருப்பைஞ்சீலி பகுதியில் செயற்கை வைரம் பட்டைத் தீட்டும் தொழில் குடிசைத் தொழிலாக ஒரு காலத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த தொழில் நலிவடைந்து வருகிறது. இதை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை என்பது இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
ஸ்ரீரங்கம் - நொச்சியம் இடையே கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நீண்டகாலமாக நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016-ம் ஆண்டு இந்த தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக இருந்த பரமேஸ்வரி முருகேசன், திமுக வேட்பாளரான கணேசனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் ஜன.20-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியலின்படி 1,17,640 ஆண்கள், 1,25,601 பெண்கள், 31 இதரர் என மொத்தம் 2,43,272 வாக்காளர்கள் உள்ளனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | எம். பரமேஸ்வரி | அதிமுக |
| 2 | எஸ். கணேசன் | திமுக |
| 3 | எம். பாபு | தேமுதிக |
| 4 | எம். பிரின்ஸ் | பாமக |
| 5 | எஸ். அரவிந்த் | பாஜக |
| 6 | ஆர். மணிகண்டன் | நாம் தமிழர் |
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,06,996 |
| பெண் | 1,12,259 |
| மூன்றாம் பாலினத்தவர் | 22 |
| மொத்த வாக்காளர்கள் | 2,19,277 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | பூனாட்சி.T.P | அதிமுக | 83105 |
| 2 | செல்வராஜ்.N | திமுக | 63915 |
| 3 | சுப்ரமணியம்.M | பாஜக | 4127 |
| 4 | ரெத்தினகுமார்.G | சுயேச்சை | 1093 |
| 5 | அன்பழகன்.V | புரட்சி பாரதம் | 1010 |
| 6 | கணேசன்.P | பகுஜன் சமாஜ் கட்சி | 791 |
| 7 | கார்த்திக்.R | இந்திய ஜனநாயக கட்சி | 514 |
| 8 | செங்குட்டவன்.A | சுயேச்சை | 489 |
| 9 | தமிழ்செல்வன்.S | சுயேச்சை | 453 |
| 10 | ஸ்ரீனிவாசன்.R | சுயேச்சை | 380 |
| 11 | சவரிமுத்து.S | சுயேச்சை | 331 |
| 12 | கார்த்திக்.K | சுயேச்சை | 229 |
| 156437 |