

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| குமார் | அதிமுக |
| அன்பில் மகேஷ் | திமுக |
| எஸ்.செந்தில்குமார் | அமமுக |
| முருகானந்தம் | மக்கள் நீதி மய்யம் |
| வெ.சோழசூரன் | நாம் தமிழர் கட்சி |
திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் உள்ளது திருவெறும்பூர். பாரத மிகுமின் நிலையம் (பெல்), துப்பாக்கித் தொழிற்சாலை (ஓஎப்டி), கனகர உலோக ஊடுருவி தொழிற்சாலை (எச்ஏபிபி) ஆகிய 3 முக்கியமான மத்திய அரசின் தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள தொகுதியாக திருவெறும்பூர் விளங்குகிறது. மேலும் இவற்றைச் சார்ந்த 500-க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இத்தொகுதியில் செயல்படுகின்றன.
அதுமட்டுமின்றி தேசிய தொழில்நுட்ப கழகம் (என்ஐடி), தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப பூங்கா, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாகம், அரசு ஐடிஐ, துவாக்குடி அரசுக் கல்லூரி உள்பட ஏராளமான அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள், தனியார் பள்ளி, கல்லூரிகள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
ஸ்ரீரங்கம் வட்டம் (பகுதி)
பனையக்குறிச்சி, கீழமுல்லக்குடி, குவளக்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தாளப்பேட்டை, அகரம், எல்லக்குடி, ஆலத்தூர், கிழக்குறிச்சி, கீழக்கல்கண்டார்கோட்டை, சோழமாதேவி, வாளவந்தான்கோட்டை, திருநெடுங்குளம், அசூர், எலந்தப்பட்டி, கும்பக்குடி, குண்டூர், சூரியூர் மற்றும் காந்தலூர் கிராமங்கள்.
திருச்சிராப்பள்ளி வட்டம் (பகுதி) திருச்சிராப்பள்ளி (மாநகராட்சி) வார்டு எண்: 7, 27 முதல் 32 வரை மற்றும் 36 பாப்பாக்குறிச்சி (மக்கள்தொகை கணக்கெடுப்பு நகரம்), திருவெறும்பூர் (பேரூராட்சி), கூத்தப்பார் (பேரூராட்சி), கிருஷ்ணசமுத்திரம் (மக்கள்தொகை கணக்கெடுப்பு நகரம்), துவாக்குடி (பேரூராட்சி), நாவல்பட்டு (மக்கள்தொகை கணக்கெடுப்பு நகரம்) மற்றும் பழங்கணங்குடி (மக்கள்தொகை கணக்கெடுப்பு நகரம்).
திருச்சி மாநகராட்சி வார்டுகளுடன் துவாக்குடி, கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், நவல்பட்டு, பழங்கனாங்குடி, பனையக்குறிச்சி, கீழ முல்லக்குடி, குவளக்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், கிழக்குறிச்சி, வாளவந்தான்கோட்டை, கும்பக்குடி, குண்டூர், சூரியூர் உள்ளிட்ட பகுதிகளும், அவற்றைச் சார்ந்த கிராமங்களும் இத்தொகுதியின் கீழ் வருகின்றன. இவற்றில் 1,43,229 ஆண்கள், 1,48,609 பெண்கள், 53 திருநங்கைகள் என 2,91,891 வாக்காளர்கள் உள்ளனர். மத்திய அரசு தொழில் நிறுவனங்களும், மத்திய கல்வி நிறுவனங்களும் அதிகளவில் இருப்பதால், இத்தொகுதியில் தமிழர்கள் மட்டுமின்றி பிற மாநிலத்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது.
தொகுதி பிரச்சினைகள்
பரப்பளவு அடிப்படையில் நகரமும், கிராமமும் கலந்த தொகுதியாக இருப்பதால் இங்கு வழக்கம்போல சாலை, குடிநீர் தட்டுப்பாடு, தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு குறைவில்லை. எனினும், அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானாவில் இருந்து துவாக்குடி வரை சர்வீஸ் சாலை (அணுகுசாலை) அமைக்க வேண்டும், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை ரயில்வே பணிமனை, குடியிருப்புகளுக்குச் செல்ல சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பிரதானமாக காணப்படுகின்றன. இவற்றை வலியுறுத்தி இத்தொகுதி மக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தியும், சட்டமன்றத்தில் குரல் கொடுத்தும் இதுவரை விடிவு ஏற்படவில்லை.
இத்தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேமுதிக வேட்பாளர் எஸ்.செந்தில்குமாரை வீழ்த்தி வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் டி.கலைச்செல்வன் மூன்றாமிடம் பிடித்தார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,43,229 |
| பெண் | 1,48,609 |
| மூன்றாம் பாலினத்தவர் | 53 |
| மொத்த வாக்காளர்கள் | 2,91,891 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | டி. கலைச்செல்வன் | அதிமுக |
| 2 | அன்பில் மகேஷ் பொய்யாமொழி | திமுக |
| 3 | எஸ். செந்தில்குமார் | தேமுதிக |
| 4 | கே. திலீப்குமார் | பாமக |
| 5 | இ. சிட்டிபாபு | பாஜக |
| 6 | வி. சோலசூரன் | நாம் தமிழர் |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1967 - 2011 )
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
| 1967 | வி. சுவாமிநாதன் | காங்கிரஸ் | 33513 | 50.15 |
| 1971 | காமாட்சி | திமுக | 43233 | 53.05 |
| 1977 | கே. எசு. முருகேசன் | அதிமுக | 24594 | 32.06 |
| 1980 | குருசாமி என்கிற அண்ணாதாசன் | அதிமுக | 51012 | 56.24 |
| 1984 | குருசாமி என்கிற அண்ணாதாசன் | அதிமுக | 47900 | 47.84 |
| 1989 | பாப்பா உமாநாத் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 54814 | 43.67 |
| 1991 | டி. இரத்தினவேல் | அதிமுக | 69596 | 59.76 |
| 1996 | கே. துரை | திமுக | 78692 | 62.6 |
| 2001 | கே. என். சேகரன் | திமுக | 61254 | 47.3 |
| 2006 | கே. என். சேகரன் | திமுக | 95687 | --- |
| 2011 | எஸ்.செந்தில்குமார் | தேமுதிக | 71356 | --- |
| ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
| 1967 | கே. காமாட்சி | திமுக | 28884 | 43.22 |
| 1971 | வி. சுவாமிநாதன் | ஸ்தாபன காங்கிரஸ் | 38258 | 46.95 |
| 1977 | வி. சுவாமிநாதன் | காங்கிரஸ் | 23742 | 30.95 |
| 1980 | கே. எசு. முருகேசன் | திமுக | 39047 | 43.05 |
| 1984 | பாப்பா உமாநாத் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 43421 | 43.36 |
| 1989 | வி. சுவாமிநாதன் | காங்கிரஸ் | 32605 | 25.98 |
| 1991 | பாப்பா உமாநாத் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 43074 | 36.99 |
| 1996 | டி. இரத்தினவேல் | அதிமுக | 31939 | 25.41 |
| 2001 | டி. கே. ரங்கராஜன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 50881 | 39.29 |
| 2006 | சிறீதர் வாண்டையார் | அதிமுக | 70925 | --- |
| 2011 | கே.என்.சேகரன் | திமுக | 67151 | --- |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | சேகரன் K.N | திமுக | 95687 |
| 2 | ஸ்ரீதர் வாண்டையார் | அதிமுக | 70925 |
| 3 | தங்கமணி .K | தேமுதிக | 17148 |
| 4 | பார்வதி .N | பாஜக | 2007 |
| 5 | மயில்சாமி .M | சுயேச்சை | 1870 |
| 6 | முத்துக்குமார் .S | சுயேச்சை | 979 |
| 7 | மகாலட்சுமி .E | பகுஜன் சமாஜ் கட்சி | 512 |
| 8 | சாந்தி .V | சுயேச்சை | 404 |
| 9 | முத்துகுமரன் .M | சுயேச்சை | 218 |
| 189750 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | செந்தில்குமார்.S | தேமுதிக | 71356 |
| 2 | சேகரன்.K.N | திமுக | 67151 |
| 3 | எட்வின் ஜெரால்ட்.A | இந்திய ஜனநாயக கட்சி | 3688 |
| 4 | சுந்தர்ராஜன்.V | சுயேச்சை | 3145 |
| 5 | சையது முகமது அபுதாகிர்.I | சுயேச்சை | 1885 |
| 7 | ராஜா.R | பகுஜன் சமாஜ் கட்சி | 1212 |
| 8 | லாரன்ஸ்.A | சுயேச்சை | 1083 |
| 9 | செழியன்.B | சுயேச்சை | 389 |
| 10 | பிரேம் குமார்.S | சுயேச்சை | 331 |
| 11 | முத்துகுமார்.S | சுயேச்சை | 303 |
| 150543 |