

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| பத்மநாதன் | அதிமுக |
| கே.என்.நேரு | திமுக |
| ஆர்.அப்துல்லா ஹஸ்ஸான் | அமமுக |
| அபுபக்கர் சித்திக் | மக்கள் நீதி மய்யம் |
| வி.வினோத் | நாம் தமிழர் கட்சி |
2006 பொதுத்தேர்தல் வரை திருச்சி 2 என்றிருந்த இந்தத் தொகுதி, தொகுதி மறுசீரமைப்பில் திருச்சி மேற்கு தொகுதியானது. முழுவதும் நகரப் பகுதியைக் கொண்ட இத்தொகுதியில் படித்த மற்றும் ஏராளமான அரசு ஊழியர்கள் வசிக்கின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், மாநகராட்சி மைய அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை, ரயில் சந்திப்பு என பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் இத்தொகுதிக்குள் அடங்கியுள்ளன. இவை எல்லாவற்றையும்விட திருச்சி மேற்கு தொகுதியின் பிரதான அடையாளமாக மத்திய பேருந்து நிலையத்தைக் குறிப்பிடலாம். திருச்சி (மாநகராட்சி) வார்டு எண்: 39 முதல் 42 வரை மற்றும் 44 முதல் 60 வரை இத்தொகுதியில் அடங்கியுள்ளன.
நகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு முக்கிய காரணமாக மத்திய பஸ் நிலையம் அமைந்துள்ளதால், ஒருங்கிணைந்த பஸ் முனையம் அமைக்க வேண்டும் என்ற அனைத்துத் தரப்பு மக்களும் பல்லாண்டுகாக கோரி வருகின்றனர்.
2011, ஏப்.13-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுகவின் கேஎன்.நேருவை (70,313 வாக்குகள்) எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற என்.மரியம்பிச்சை (77,492 வாக்குகள்) அமைச்சராக பொறுப்பேற்கச் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்ததால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 2011, அக்.13-ல் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மு.பரஞ்ஜோதி (69,029) போட்டியிட்டு, 14,684 வாக்குகள் வித்தியாசத்தில் (நேரு 54,345) வெற்றி பெற்றார். சில மாதங்கள் அமைச்சராக இருந்த அவர், டாக்டர் ராணி என்பவர் அளித்த புகாரின்பேரில் அமைச்சர் பதவியை இழந்தார்.
கடந்த 2016 தேர்தலில் திமுக வேட்பாளரான கே.என்.நேரு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த மனோகரனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,29,407 |
| பெண் | 1,38,954 |
| மூன்றாம் பாலினத்தவர் | 18 |
| மொத்த வாக்காளர்கள் | 2,68,379 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | ஆர். மனோகரன் | அதிமுக |
| 2 | கே.என். நேரு | திமுக |
| 3 | ஏ. ஜோசப் ஜெரால்டு | தேமுதிக |
| 4 | கே. விஜயராகவன் | பாமக |
| 5 | பி. சதீஷ்குமார் | ஐஜேகே |
| 6 | சேது. மனோகரன் | நாம் தமிழர் |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | மரியம் பிச்சை.N | அதிமுக | 77492 |
| 2 | நேரு.K.N | திமுக | 70313 |
| 3 | திருமலை.R | பாஜக | 2569 |
| 4 | செல்வம்.P | இந்திய ஜனநாயக கட்சி | 1487 |
| 5 | வெங்கடாசலம் | சுயேச்சை | 475 |
| 6 | இளங்கோ | பகுஜன் சமாஜ் கட்சி | 407 |
| 7 | மோகனரங்கன்.S | சுயேச்சை | 295 |
| 8 | முருகராஜன்.T | சுயேச்சை | 282 |
| 9 | பாலு.O (எ) பாலசுப்ரமணியன் | சுயேச்சை | 223 |
| 10 | முரளிதரன்.S | சுயேச்சை | 156 |
| 11 | பாலசுப்ரமணியன்.M | லோக சனசக்தி கட்சி | 152 |
| 12 | வாசுதேவன் | சுயேச்சை | 145 |
| 13 | அசோகன்.K | சுயேச்சை | 134 |
| 14 | சுகுமார்.R | சுயேச்சை | 109 |
| 15 | சரவணகுமார்.T | சுயேச்சை | 82 |
| 154321 |
2006 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | நேரு கே.என் | திமுக | 74026 |
| 2 | மரியம் பிச்சை | அதிமுக | 57394 |
| 3 | செந்தூரேஸ்வரன் | தேமுதிக | 14027 |
| 4 | மதியரசன் | பாஜக | 2413 |
| 5 | இளங்கோவன் | பி.எஸ்.பி. | 642 |
| 6 | காஜா முகமது | சுயேச்சை | 536 |
| 7 | ரவிச்சந்திரன் | சுயேச்சை | 289 |
| 8 | பாலகிருஷ்ணன் | ஏ.பி.ஹெச்.எம் | 184 |
| 9 | மோகன் | சுயேச்சை | 154 |
| 10 | முருகன் | சுயேச்சை | 154 |
| 11 | முரளிதரன் | சுயேச்சை | 112 |
| மொத்தம் | 149931 |