

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| முரளி (பாமக) | அதிமுக |
| எஸ் .அம்பேத்குமார் | திமுக |
| பி.வெங்கடேசன் | அமமுக |
| எஸ்.சுரேஷ் | மக்கள் நீதி மய்யம் |
| க.பிரபாவதி | நாம் தமிழர் கட்சி |
வந்தவாசி என்றால் கோரை பாய்களுக்கு புகழ்பெற்றதாகும். தமிழகம் முழுவதும் பிரபலம். தென்னாங்கூர் கிராமத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலையை போல் வென்குன்றம் தவளகிரீஸ்வரர் மலையில் கார்த்திகை தீபத் திருவிழா கோலகலமாக நடைபெறும்.
மேலும் கோயில், மசூதி, தேவாலயங்கள் ஏராளமாக உள்ளது. வன்னியர்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கின்றனர். வந்தவாசி நகரில் முஸ்லிம் மக்கள், முதலியார், யாதவர், ஜைன சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள பகுதி. நெல், கரும்பு ஆகியவை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
வந்தவாசி வட்டம் (பகுதி)
சோழவரம், நம்பேடு, ஆணைபோகி, விளாநல்லூர், ஆயிலபாடி, கீழ்கொவளைவேடு, சேத்துப்பட்டு, தெள்ளூர், புலிவாய், தென்னாங்கூர், காரம், கொசப்பட்டு, ஒழப்பாக்கம், ஆரியாத்தூர், விளாங்காடு, இரும்பேடு, கொவளை, கீழ்நர்மா, கீழ்ப்பாக்கம், சாத்தனூர், கோயில்குப்பம், வழூர், விழுதுப்பட்டு, தழுதாழை, சளுக்கை, தாழம்பள்ளம், வெங்குணம், மும்முணி, காரணை, தென்சேந்தமங்கலம், எறும்பூர், தென் ஆளப்பிறந்தான், மேல்செம்பேடு, ஊர்குடி, வல்லம், வடுகமங்கலம், செப்டாங்குளம், அரியப்பாடி, இஞ்சிமேடு, சந்திரம்பாடி, கட்டமங்கலம், மோசவாடி, தாடி நொளம்பை, கோதண்டபுரம், தென்கரை, வடவணக்கம்பாடி, மேல்பாதி, தக்கண்டராயபுரம், அரசூர், மாம்பட்டு, கீழ்சாத்தமங்கலம், பாதிரி, சொன்னாவரம், பிருதூர், மங்கநல்லூர், அகரம், மேல்கொடுங்கலூர், கீழ்கொடுங்கலூர், காவேடு, உளுந்தை, சாலவேடு, மங்கலம், மாமண்டூர், மருதாடு, கொடநல்லூர், சேதாரக்குப்பம், செம்பூர், இளங்காடு, ஆவனவாடி, வங்காரம், கிழ்வெள்ளியூர், கடம்பை, மழையூர், ஏந்தல், மாணிக்கமங்கலம், ரெட்டிக்குப்பம், ரகுநாதசமுத்திரம், கோழிப்புலியூர், கல்யாணபுரம், ஆளியூர், சோலையருகாவூர், செங்கம்பூண்டி, கண்டவரட்டி, கூத்தம்பட்டு, பொன்னூர், நல்லேரி, ஜம்மம்பட்டு, நடுக்குப்பம், ஏரிப்பட்டு, அத்திப்பாக்கம், நாவல்பாக்கம், கீழ்வில்லிவளம், மழுவங்கரணை, புன்னை, கொட்டை, வெளியம்பாக்கம், கீழ்சீசமங்கலம், கருடாபுரம், சீயலம், அம்மணம்பாக்கம், பாதூர், அதியனூர், அதியங்குப்பம், ஓசூர், நெல்லியங்குளம், ஸ்ரீரங்கராஜபுரம், கண்டியநல்லூர், ராமசமுத்திரம், சோகத்தூர், ஏம்பலம், தென்வணக்கம்பாடி, ஜப்திகாரணை, சொரப்புத்தூர், கீழ்புத்தூர், திரக்கோயில்,தேத்துரை, சாத்தான்பூண்டி, பெருங்கடபுத்தூர், அரியம்பூண்டி, மடம், இசாகொளத்தூர், கோட்டுப்பாக்கம், மேலச்சேரி, நல்லடிசேனை, தென்னாத்தூர், சீயமங்கலம், தென் தின்னலூர், சீவனம், பாப்பநல்லூர், தெள்ளார், மீசநல்லூர், ஏரமலூர், மூடூர், காவணியாத்தூர், கல்பட்டுநைனான்குப்பம், ஏய்ப்பாக்கம், வெண்மந்தை, கீழ்செம்மேடு, அமுடுர், பாதூர், தெய்யார், கொடியாலம், கூடலூர், கூத்தவேடு, அகரகோரகோட்டை, கூனம்பாடி, பாஞ்சரை, ஆச்சமங்கலம், சித்தருகாவூர், கீழ்ங்குணம், கெங்கம்பூண்டி, அருந்தோடு, வயலூர், பூங்குணம், வடக்குப்பட்டு, மகமாயி திருமணி, வெடாஅல், குண்ணகம்பூண்டி, நெற்குணம், கீழ்நமண்டி, கோரக்கோட்டை, சேணல், பெண்ணாட்டகரம், இரும்பிலி, பழவேரி, சு.காட்டேரி, அருங்குணம், மாவலவாடி, t.தாங்கல் மற்றும் சத்தியவாடி கிராமங்கள்.
பெரணமல்லூர் (பேரூராட்சி), வந்தவாசி (நகராட்சி) மற்றும் தேசூர் (பேரூராட்சி)
தொகுதி மக்கள் கோரிக்கைகள்
வந்தவாசி தொகுதியில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க சிப்காட் அமைத்து கொடுக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை, கானல் நீராகவே உள்ளது. மருத்துவ வசதியும் இல்லை. காய்ச்சல், சளி, தலைவலியை தவிர, இதர நோய்களுக்கு சிகிச்சை பெற செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவலம் உள்ளது. வந்தவாசியில் உள்ள அரசு மருத்துவனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.
சுகநதியில் தடுப்பணை கட்ட வேண்டும். வந்தவாசி மற்றும் சுற்றுப் பகுதியில் பாய் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளது. உற்பத்தி செய்யப்படும் பாய்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. அதனால், பாய் கொள்முதல் நிலையம் தொடங்கி, வந்தவாசியை பாய் நகரம் என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. வென்குன்றம் தவளகிரீஸ்வரர் மலையில் பாதை அமைக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். வந்தவாசி நகரை இணைக்கும் வகையில் வெளிபுற சுற்றுவட்ட புறவழிச்சாலை திட்டத்தை கொண்டு வர வேண்டும். மூடப்பட்டுள்ள உழவர் சந்தையை மீண்டும் திறக்க வேண்டும்.
தேர்தல் வரலாறு
வந்தவாசி சட்டபேரவை தொகுதியில் கடந்த 1951-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடைபெற்றுள்ள 15 தேர்தலில் திமுக 7 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பொது நலக் கட்சி மற்றும் பாமக தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2016-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த மேகநாதனை வீழ்த்தி திமுகவைச் சேர்ந்த அம்பேத்குமார் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,18,230 |
| பெண் | 1,21,439 |
| மூன்றாம் பாலினத்தவர் | 1 |
| மொத்த வாக்காளர்கள் | 2,39,670 |
2016 தேர்தல் வேட்பாளர்கள்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | வி.மேகநாதன் | அதிமுக |
| 2 | எஸ்.அம்பேத்குமார் | திமுக |
| 3 | எம்.கே.மேத்தா ரமேஷ் | விசிக |
| 4 | எஸ்.வடிவேல் ராவணன் | பாமக |
| 5 | ஜெ.சுதா | ஐஜேகே |
| 6 | சி.நீலகண்டன் | நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
| 1951 | சோமசுந்தர கவுண்டர் | பொது நல கட்சி | 41975 |
| 1957 | எம். இராமசந்திர ரெட்டி | காங்கிரஸ் | 44610 |
| 1962 | எஸ்.முத்துலிங்கம் | திமுக | 34922 |
| 1967 | முத்துலிங்கம் | திமுக | 38626 |
| 1971 | வி. இராசகோபால் | திமுக | 41452 |
| 1977 | பி. முனுசாமி | அதிமுக | 28306 |
| 1980 | சி. குப்புசாமி | அதிமுக | 38501 |
| 1984 | எ. ஆறுமுகம் | காங்கிரஸ் | 48712 |
| 1989 | வி. தனராசு | திமுக | 35264 |
| 1991 | சி. கே. தமிழரசன் | அதிமுக | 55990 |
| 1996 | பாலா ஆண்டான் | திமுக | 65775 |
| 2001 | கே. முருகவேல் ராசன் | பாமக | 55773 |
| 2006 | எசு. பி. ஜெயராமன் | திமுக | 65762 |
| ஆண்டு | 2ம் இடம்பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
| 1951 | இராமானுச ரெட்டியார் | காங்கிரஸ் | 29962 |
| 1957 | டி. தசரதன் | காங்கிரஸ் | 22187 |
| 1962 | டி. தசரதன் | காங்கிரஸ் | 19160 |
| 1967 | எ. ஆதிநீலம் | காங்கிரஸ் | 21300 |
| 1971 | டி. தசரதன் | ஸ்தாபன காங்கிரஸ் | 23465 |
| 1977 | சி. கண்ணப்பன் | திமுக | 26476 |
| 1980 | சி. கண்ணியப்பன் | திமுக | 36019 |
| 1984 | வி. இராசகோபால் | திமுக | 38326 |
| 1989 | டி. எஸ். கோவிந்தன் | காங்கிரஸ் | 21176 |
| 1991 | வி. இராசகோபால் | திமுக | 26496 |
| 1996 | வி. குணசீலன் | அதிமுக | 26029 |
| 2001 | கே. லோகநாதன் | திமுக | 46902 |
| 2006 | எம். சக்கரபாணி | அதிமுக | 42974 |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | S.P. ஜெயராமன் | தி.மு.க | 65762 |
| 2 | M. சக்கரபாணி | அ.தி.மு.க | 42974 |
| 3 | N. சிவசண்முகம் | தே.மு.தி.க | 9096 |
| 4 | S. ஜெயராமன் | சுயேட்சை | 1895 |
| 5 | K. ராஜசேகர் | பி.ஜே.பி | 1535 |
| 6 | M. மோகன் | எஸ்.பி | 684 |
| 7 | M. மாசிலமணி | சுயேட்சை | 673 |
| 8 | M. ரவி | சுயேட்சை | 425 |
| 9 | V. சசிகுமார் | சுயேட்சை | 370 |
| 123414 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | V. குணசீலன் | அ.தி.மு.க | 84529 |
| 2 | J. கமலக்கண்ணன் | தி.மு.க | 72233 |
| 3 | A. தேவேந்திரன் | சுயேச்சை | 2020 |
| 4 | T. பொன்னன் | பி.எஸ்.பி | 1112 |
| 5 | K. ராஜசேகர் | பி.ஜே.பி | 1090 |
| 6 | E. சேகர் | சுயேச்சை | 788 |
| 7 | P. சங்கர் | சுயேச்சை | 333 |
| 8 | A. ஆனந்தவேல் | சுயேச்சை | 294 |
| 162399 |