

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| கப்பச்சி வினோத் | அதிமுக |
| ராமசந்திரன் | திமுக |
| கலைச்செல்வன் | அமமுக |
| ராஜ்குமார் | மக்கள் நீதி மய்யம் |
| மா.லாவண்யா | நாம் தமிழர் கட்சி |
தமிழகத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் 110-வது இடத்தில் உள்ள தொகுதி குன்னூர். மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள 3 தொகுதிகளில் இதுவும் ஒன்று. தனித் தொகுதியாக இருந்து வந்த குன்னூர், கடந்த 2011-ம் ஆண்டு பொதுத்தேர்தல் முதல், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டு பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.
குன்னூர் சட்டப்பேரவைத் தொகுயில் குன்னூர், கோத்தகிரி ஆகிய இரண்டு தாலுக்காக்கள் உள்ளன. குன்னூரில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களான பாஸ்டியர் ஆய்வகம் மற்றும் அருவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலைகள் ஆகியவை இத்தொகுதியின் முக்கிய அடையாளங்களாக உள்ளன.
காய்கறி மற்றும் தேயிலை விவசாயம் ஆகியவை இங்கு பிரதான தொழிலாக உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் விவசாயிகளாக உள்ளனர். பாரம்பரியமான படுகர் இன மக்களுக்கு அடுத்ததாக இந்து, இஸ்லாமிய மக்கள் கணிசமாக இத்தொகுதியில் வசிக்கின்றனர். தவிர, இருளர் மற்றும் குரும்பர் இன பழங்குடி மக்களும், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய மக்களும் கணிசமாக வசிக்கின்றனர்.
குன்னூரில் அரசு மற்றும் தனியார் தேயிலை ஏல மையங்கள் உள்ளன. இதனால் தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் குடோன்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. தேயிலை தொழிலை சார்ந்து மட்டும், ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் உள்ளனர்.பசுந்தேயிலைக்கு போதிய விலை இல்லாததால் பெரும்பாலான தேயிலை தோட்டங்கள் விற்கப்பட்டு வருகின்றன.
இவற்றை வாங்குபவர்கள் தேயிலை தோட்டங்களை அழித்து ஆடம்பரக் கட்டிடங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் உள்ளூர் மக்கள் வேலை வாய்ப்பை இழந்து, பிழைப்பு தேடி சமவெளிப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
மக்களின் கோரிக்கைகள்
மிகவும் குறுகிய நகரமான குன்னூரின் பிரதான பிரச்சினை ஆக்கிரமிப்பு மற்றும் தண்ணீர் தேவை உள்ளது. குன்னூர் நகரின் தண்ணீர் தேவையை போக்க, கடந்த 2011-ம் ஆண்டு மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா எமரால்டு அணையிலிருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை அறிவித்தார். நீண்ட நாட்களுக்கு பின்னர் தற்போது தண்ணீர் கொண்டு வர சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.குன்னூர் பேருந்து நிலைய விரிவாக்கத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
குன்னூர் நகரின் நுழைவுவாயில் மலை ரயில் பாதை உள்ளது. காலை 10 மணி மற்றும் மதியம் 3 மணிக்கு மலை ரயில் வரும் போது வாயில் மூடப்படுவதால், தினமும் இப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக, மேற்கண்ட பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பசுந்தேயிலைக்கு ஆதார விலையாக கிலோவுக்கு ரூ.30 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதி அளிக்கப்படாலும் இது வரை விலை நிர்ணயம் செய்யப்படவில்லை.
திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் ஒன்றாக கருதப்படும் குன்னூர் சட்டப்பேரவை தொகுதியை கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கைப்பற்றியது. திமுக மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக்கை அவரது சொந்த ஊரில் தோற்கடித்து அதிமுக வேட்பாளர் சாந்தி அ.ராமு வெற்றி பெற்றார். கடந்த 2006-ல் சவுந்திரபாண்டின்(திமுக) மற்றும் 2011-ல் க.ராமசந்திரன்(திமுக) மற்றும் 2016-ல் சாந்தி அ.ராமு(அதிமுக) வெற்றி பெற்றனர்.
இத்தொகுதியில் உள்ள இடங்கள்
கடந்த 2008-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டதன் அடிப்படையில், இத்தொகுதியில் கோத்தகிரி வட்டம், குன்னார் வட்டம், எட்டப்பள்ளி, பர்லியாறு, குன்னூர் மற்றும் மேலூர் கிராமங்கள், அரவங்காடு, வெலிங்டன், குன்னூர் நகராட்சி, அதிகரட்டி பேரூராட்சி மற்றும் உலிக்கல் பேரூராட்சி ஆகியவை உள்ளன.
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1. | சாந்தி ஏ,ராமு | அதிமுக |
| 2. | பா.மு.முபாரக் | திமுக |
| 3. | வி.சிதம்பரம் | தேமுதிக |
| 4. | கே.வி.செந்தில்குமார் | பாமக |
| 5. | பி.குமரன் | பாஜக |
| 6. | பி.ராமசாமி | நாம் தமிழர் |
2021-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 91,301 |
| பெண் | 99,999 |
| மூன்றாம் பாலினத்தவர் | 7 |
| மொத்த வாக்காளர்கள் | 1,91,307 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | ஆண்டு |
| 1957 | ஜெ. மாதே கவுடர் | காங்கிரஸ் | 22113 | 44.56 | 1957 |
| 1962 | ஜெ. மாதே கவுடர் | காங்கிரஸ் | 36668 | 51.65 | 1962 |
| 1967 | பி. கவுடர் | திமுக | 31855 | 58.74 | 1967 |
| 1971 | ஜெ. கருணைநாதன் | திமுக | 33451 | 60.84 | 1971 |
| 1977 | கே. அரங்கசாமி | திமுக | 22649 | 42.33 | 1977 |
| 1980 | எம். அரங்கநாதன் | திமுக | 34424 | 56.85 | 1980 |
| 1984 | எம். சிவக்குமார் | அதிமுக | 47113 | 56.7 | 1984 |
| 1989 | என். தங்கவேல் | திமுக | 40974 | 42.38 | 1989 |
| 1991 | எம். கருப்புசாமி | அதிமுக | 53608 | 59.4 | 1991 |
| 1996 | என். தங்கவேல் | திமுக | 63919 | 64.27 | 1996 |
| 2001 | கே. கந்தசாமி | தமாகா | 53156 | 55.86 | 2001 |
| 2006 | எ. சவுந்தரபாண்டியன் | திமுக | 45303 | --- | 2006 |
| 2011 | கா.ராமச்சந்திரன் | திமுக | 61302 | --- | 2011 |
| ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
| 1957 | எச். பி. அரி கவுடர் | சுயேச்சை | 16845 | 33.94 |
| 1962 | ஜெ. பெல்லி | திமுக | 15103 | 21.27 |
| 1967 | எம். கே. என். கவுடர் | காங்கிரஸ் | 22380 | 41.26 |
| 1971 | என். ஆண்டி | ஸ்தாபன காங்கிரஸ் | 15325 | 27.87 |
| 1977 | சி. பெரியசாமி | அதிமுக | 13150 | 24.58 |
| 1980 | சி. பெரியசாமி | அதிமுக | 22756 | 37.58 |
| 1984 | எம். அரங்கநாதன் | திமுக | 34990 | 42.11 |
| 1989 | பி. ஆறுமுகம் | காங்கிரஸ் | 29814 | 30.84 |
| 1991 | ஈ. எம். மாகாளியப்பன் | திமுக | 31457 | 34.86 |
| 1996 | எசு. கருப்புசாமி | அதிமுக | 28404 | 28.56 |
| 2001 | ஈ. எம். மாகாளியப்பன் | திமுக | 36512 | 38.37 |
| 2006 | எம். செல்வராசு | அதிமுக | 39589 | --- |
| 2011 | தெள்ளி | இகம்யூ | 52010 | --- |
| 2006 சட்டமன்ற தேர்தல் | 116. குன்னூர் | ||
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | A. சொந்தரப்பாண்டியன் | தி.மு.க | 45303 |
| 2 | M. செல்வராஜ் | அ.தி.மு.க | 39589 |
| 3 | V. சிதம்பரம் | தே.மு.தி.க | 7227 |
| 4 | D. அன்பரசன் | பிஜேபி | 1729 |
| 5 | P. ராமச்சந்திரன் | சுயேச்சை | 594 |
| 6 | P. தென்மதி | பிஎஸ்பி | 569 |
| 7 | A. அன்னக்கிளி | சுயேச்சை | 405 |
| 8 | P. ஆறுமுகம் | ஏஐஎப்பி | 250 |
| 95666 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
| 2011 சட்டமன்ற தேர்தல் | 116. குன்னூர் | ||
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | K. ராமச்சந்திரன் | தி.மு.க | 61302 |
| 2 | A. பெல்லி | சி.பி.இ | 52010 |
| 3 | M. அல்வஸ் | பிஜேபி | 3040 |
| 4 | அப்துல் வஹாப் | சுயேச்சை | 1231 |
| 5 | R. ஜோதிலிங்கம் | சுயேச்சை | 871 |
| 6 | V. மதிவண்ணன் | சுயேச்சை | 803 |
| 7 | M.G. லியோன் ஜெரால்டு திலக் | பகுஜன் | 798 |
| 8 | V. இசக்கிமுத்து | சுயேச்சை | 612 |
| 9 | N. லெனின் | ஐஜேகே | 348 |
| 121015 |