174 - தஞ்சாவூர்
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| அறிவுடைநம்பி | அதிமுக |
| நீலமேகம் | திமுக |
| டாக்டர் பி.ராமநாதன் (தேமுதிக) | அமமுக |
| சுந்தரமோகன் | மக்கள் நீதி மய்யம் |
| வீ.சுபாதேவி | நாம் தமிழர் கட்சி |
மாவட்டத்தின் தலைநகராக உள்ள தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதியில் 1957 முதல் தொடர்ந்து தேர்தல் நடைபெற்று வருகிறது.
இத்தொகுதியில் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில், சரஸ்வதி மகால் நூலகம் ஆகியவை இடம்பெற்றுள்ளது. தொகுதியில் செளாராஷ்டிரா, முக்குலத்தோர், இஸ்லாமியர்கள், தலித்துகள் அதிகம் வசிக்கின்றனர்.
இத்தொகுதியில் தஞ்சாவூர் மாநகராட்சி, வல்லம் பேரூராட்சி ஆகியவையும் கிராமப்புறங்களும் இடம்பெற்றுள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
தஞ்சாவூர் வட்டம் (பகுதி)
புதுப்பட்டினம், ஆவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேலசித்தர்காடு, புன்னைநல்லூர், புளியந்தோப்பு மற்றும் பிள்ளையார்பட்டி கிராமங்கள்
தஞ்சாவூர் (மாநகராட்சி), நீலகிரி (சென்சஸ் டவுன்). நாஞ்சிக்கோட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் வல்லம் (பேரூராட்சி).
1962-ம் ஆண்டில் இத்தொகுதியில் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தொகுதியில் திமுக 9 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2016-ல் பணப்பட்டுவாடா புகாரில் 6 மாதங்கள் தாமதமாக நடந்த தேர்தலில் அதிமுகவின் எம்.ரெங்கசாமி இரண்டாம் முறையாக வென்றார். அமமுகவின் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் ரெங்கசாமியும் ஒருவர்.
இதையடுத்து 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் திமுகவின் டிகேஜி.நீலமேகம் வெற்றி பெற்றார்.
கடந்த 1952 முதல் 2011 வரை ( 1984 இடைத் தேர்தல்) நடைபெற்ற 15 சட்டப்பேரவைத் தேர்தல்களில், 8 முறை திமுக, 5 முறை காங்கிரஸ், 2 முறை அதிமுக வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2006 தேர்தலில் திமுகவின் சி.நா.மீ. உபயதுல்லாவும், 2011 தேர்தலில் அதிமுகவின் எம். ரெங்கசாமியும் வெற்றிபெற்றனர்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,38,166 |
| பெண் | 1,50,678 |
| மூன்றாம் பாலினத்தவர் | 56 |
| மொத்த வாக்காளர்கள் | 2,88,900 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | எம். ரெங்கசாமி | அதிமுக |
| 2 | அஞ்சுகம் பூபதி | திமுக |
| 3 | வி. ஜெயபிரகாஷ் | தேமுதிக |
| 4 | கோ. குஞ்சிதபாதம் | பாமக |
| 5 | எம்.எஸ். ராமலிங்கம் | பாஜக |
| 6 | ஏ. நல்லதுரை | நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
| ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி |
| 1952 | M.மாரிமுத்து மற்றும் S. இராமலிங்கம் | இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) |
| 1957 | A. Y. S. பரிசுத்தநாடார் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 1962 | மு. கருணாநிதி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1967 | A. Y. S. பரிசுத்தநாடார் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 1971 | S.நடராஜன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1977 | S.நடராஜன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1980 | S.நடராஜன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1984 | துரைகிருஷ்ணமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 1989 | எஸ். என். எம். உபயத்துல்லா | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1991 | எஸ்.டி.சோமசுந்தரம் | அ.தி.மு.க |
| 1996 | எஸ். என். எம். உபயத்துல்லா | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 2001 | எஸ். என். எம். உபயத்துல்லா | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 2006 | எஸ். என். எம். உபயத்துல்லா | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 2011 | M.ரெங்கசாமி | அ.தி.மு.க |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | S.N.M. உபாயதுல்லா | தி.மு.க | 61658 |
| 2 | M. ரங்கசாமி | அ.தி.மு.க | 50412 |
| 3 | P. சிவனேசன் | தே.மு.தி.க | 7484 |
| 4 | M.S. ராமலிங்கம் | பி.ஜே.பி | 2057 |
| 5 | A. நாகேந்திரன் | சுயேச்சை | 756 |
| 6 | M. பழனிசாமி | எஸ்.பி | 367 |
| 7 | K. கனகராஜா | சுயேச்சை | 304 |
| 123038 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | M. ரங்கசாமி | அ.தி.மு.க | 75415 |
| 2 | S.N.M. உபாயதுல்லா | தி.மு.க | 68086 |
| 3 | M.S. ராமலிங்கம் | பி.ஜே.பி | 1901 |
| 4 | P. ராயார் விக்டர் ஆரோக்கியராஜ் | ஐ.ஜே.கே | 1505 |
| 5 | K. முத்துகுமாரன் | சுயேச்சை | 712 |
| 6 | V. சூசை அருள் | எல்.சி.ஒ.பி | 553 |
| 7 | P. திருநாவுக்கரசர் | பி.எஸ்.பி | 436 |
| 8 | K. பாலு | சுயேச்சை | 273 |
| 9 | G. இளவரசன் | சுயேச்சை | 249 |
| 149130 |
