

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| திருஞானசம்பந்தம் | அதிமுக |
| என்.அசோக்குமார் | திமுக |
| எம்.முத்துசிவக்குமார் | அமமுக |
| பி.பச்சமுத்து | மக்கள் நீதி மய்யம் |
| க.திலீபன் | நாம் தமிழர் கட்சி |
கடற்கரை சார்ந்த இந்த தொகுதியில் தென்னையும், மீன்பிடித்தொழிலும் முதன்மை பெற்றுள்ளது. கிராமப்புறங்களை அதிக அளவில் உள்ளடக்கிய தொகுதியாகும்.
இந்த தொகுதியில் முத்தரையர், முக்குலத்தோர், இஸ்லாமியர்கள், மீனவர்கள், தலித்துகள் அதிகம் வசிக்கின்றனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பேராவூரணி வட்டம்
ஒரத்தநாடு வட்டம் (பகுதி)
தளிகைவிடுதி, பாண்டிபழமவைக்காடு, வெட்டுவாக்கோட்டை-மிமி,வெட்டுவாக்கோட்டை-மி, சென்னியாவிடுதி, நெய்வேலிவடபாதி,நெய்வேலி தென்பாதி, வேங்கரை பெரியக்கோட்டைநாடு, வேங்கரை திப்பன்விடுதி மற்றும் வேங்கரை கிராமங்கள்,
பட்டுக்கோட்டை வட்டம் (பகுதி)
நம்பிவயல், கொள்ளுக்காடு, அனந்தகோபாலபுரம் வடபாதி, அனந்தகோபாலபுரம் தென்பாதி, பாதிரங்கோட்டை தென்பாதி, பாத்ரங்கோட்டை வடபாதி, அதம்பை வடக்கு, அதம்பை தெற்கு, நடுவிக்கோட்டை, காயாவூர், பூவளூர், வழுதலைவட்டம், வாட்டாத்திக்கோட்டை கொள்ளுக்காடு, வாட்டாத்திக்கோட்டை உக்கடை பீமாபுரம், எடையாத்தி வடக்கு,எடையாத்தி தெற்கு, சூரியநாராயணபுரம், செருவாவிடுதி வடபாதி, கிருஷ்ணபுரம், செருவாவிடுதி தென்பாதி, மடத்திக்காடு, துறவிக்காடு, புனவாசல் மேற்கு, புனவாசல் கிழக்கு, குறிச்சி, நெய்வாவிடுதி, அனந்தீஸ்வரபுரம், அலிவலம், கொண்டிகுளம், மணவயல், துவரமடை, கழுகபுளிக்காடு, பில்லன்கிழி, பாலத்தளி, எண்ணெய்வயல், எழுத்தாணிவயல், பண்ணைவயல், பைங்காட்டுவயல், கூத்தடிவயல், சொக்கநாதபுரம், பூவணம், கட்டயன்காடு உக்கடை, மதன்பட்டவூர், ஓட்டங்காடு, திருச்சிற்றம்பலம் மேற்கு, திருச்சிற்றம்பலம் கிழக்கு, களத்தூர் மெற்கு, களத்தூர் கிழக்கு, ஒட்டங்காடு உக்கடை, நடுவிக்குறிச்சி, கட்டையங்காடு, புக்கரம்பை, பள்ளத்தூர், மருதங்காவயல், கொள்ளுக்காடு, வெளிவயல், புதுப்பட்டினம், ஆண்டிக்காடு, எட்டிவயல், உதயமுடையான், ஆலடிக்காடு, அழகிநாயகிபுரம், ஏரளிவயல், கரிசவயல், தண்டாமரைக்காடு, பள்ளிஓடைவயல், புதிரிவயல், ரெண்டாம்புளிக்காடு, அலமதிக்காடு, மறவன்வயல், கள்ளிவயல் மற்றூம் சரபேந்திரராஜன் பட்டினம் கிராமங்கள் ,
ஆலங்குடி வட்டம் (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்)
காட்டாத்தி கிராமம், (**காட்டாத்தி கிராமம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வந்தாலும் கள ரீதியாகவும், நிலப்பரப்பு ரீதியாகவும் பேராவூரணி சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது).
இந்த தொகுதியில் கடந்த 1971 ம் ஆண்டு செல்லையா சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2011 ம் ஆண்டு நடிகர் அருண்பாண்டியன் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த தொகுதியில் அதிமுக ஐந்து முறையும், காங்கிரஸ், தமாகா தலா இரு முறையும், திமுக ஒரு முறையும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,07,856 |
| பெண் | 1,11,794, |
| மூன்றாம் பாலினத்தவர் | 11 |
| மொத்த வாக்காளர்கள் | 2,19,661 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | மா. கோவிந்தராஜ் | அதிமுக |
| 2 | நா. அசோக்குமார் | திமுக |
| 3 | தமயந்தி திருஞானம். | இந்திய கம்யூ |
| 4 | ப. தியாகராஜன் | பாமக |
| 5 | ரெ. இளங்கோ | பாஜக |
| 6 | க. பாலதண்டாயுதம் | நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1971 - 2011 )
| ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி |
| 1971 | குழ.செல்லையா | சுயேச்சை |
| 1977 | எம்.ஆர்.கோவிந்தன் | அதிமுக |
| 1980 | எம்.ஆர்.கோவிந்தன் | அதிமுக |
| 1984 | எம்.ஆர்.கோவிந்தன் | அதிமுக |
| 1989 | ஆர்.சிங்காரம் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 1991 | ஆர்.சிங்காரம் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 1996 | எஸ்.வி.திருஞாணசம்பந்தம் | தமாகா |
| 2001 | எஸ்.வி.திருஞாணசம்பந்தம் | தமாகா |
| 2006 | எம்.வி.ஆர்.கபிலன் | அதிமுக |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | M.V.R. வீரகபிலன் | அ.தி.மு.க | 54183 |
| 2 | S.V. திருஞானசம்பந்தர் | காங்கிரஸ் | 50577 |
| 3 | V.S.K. பழனிவேல் | தே.மு.தி.க | 19627 |
| 4 | D. தியாகராஜன் | பி.ஜே.பி | 2998 |
| 5 | M. சத்தியமூர்த்தி | சுயேச்சை | 1320 |
| 6 | M. அந்தோனிராஜ் | சுயேச்சை | 1076 |
| 129781 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | C. அருண்பாண்டியன் | தே.மு.தி.க | 51010 |
| 2 | K. மகேந்திரன் | ஐ.என்.சி | 43816 |
| 3 | S.V. திருஞானசம்பந்தர் | சுயேச்சை | 25137 |
| 4 | V. சுப்பிரமணியன் | சுயேச்சை | 7470 |
| 5 | K. தங்கமுத்து | ஜே.எம்.எம் | 4453 |
| 6 | R. இளங்கோ | பி.ஜே.பி | 2691 |
| 7 | M. பாலசுப்பிரமணியன் | சுயேச்சை | 1465 |
| 8 | V. மாயாழகு | பி.எஸ்.பி | 1432 |
| 9 | K.M. காளிமுத்து | சுயேச்சை | 1430 |
| 10 | A. முத்துகுமரன் | சுயேச்சை | 1140 |
| 140044 |