

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| பாரதி | அதிமுக |
| மு.பன்னீர் செல்வம் | திமுக |
| பொன்.பாலு | அமமுக |
| ஜி.பிரபு | மக்கள் நீதி மய்யம் |
| அ.கவிதா | நாம் தமிழர் கட்சி |
சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதியில், 1 லட்சத்து 23 ஆயிரத்து 899 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 27 ஆயிரத்து 868 பெண் வாக்காளர்களும், 12 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 779 வாக்காளர்கள் உள்ளனர்.
நூலக தந்தை என்று போற்றப்படும் ரெங்கநாதன் பிறந்த சீர்காழியில் உள்ள நூலகம் இன்னமும் வாடகை கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது.
சீர்காழிக்கு பெருமை சேர்க்கும் தமிழிசை மூவர் மணிமண்டபம் எவ்வித நிகழ்ச்சிகளும் நடைபெறாமல் பொலிவிழந்துள்ளது. குடிநீர், கழிவறை உட்பட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. ஆண்டுதோறும் நடைபெறும் 3 நாள் விழாவிற்கு பிறகு யாரும் மணிமண்டபத்தை எட்டி பார்ப்பதில்லை.
வெள்ளப்பள்ளத்தில் உள்ள உப்பனாற்றில் 12 கி.மீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உட்புகுந்து 30 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் நிலத்தடி நீர் உப்புநீராகி விட்டது. எனவே உப்பனாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் 50 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் 80 வருட பழமை காரணமாக பாழடைந்து விட்டது. இதற்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டும் இதுவரை புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. தற்போது சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் ஒரு திருமண மண்டபத்தில்தான் இயங்கி வருகிறது.
கடந்த 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.வி. பாரதி 76,487 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கிள்ளை ரவீந்திரன் 67,484 வாக்குகள் பெற்றார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,14,533 |
| பெண் | 1,17,079 |
| மூன்றாம் பாலினத்தவர் | 4 |
| மொத்த வாக்காளர்கள் | 2,31,616 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | பி.வி. பாரதி | அதிமுக |
| 2 | எஸ்.கிள்ளைரவீந்திரன் | திமுக |
| 3 | ஆர். உமாநாத் | தேமுதிக |
| 4 | பொன்.முத்துக்குமார் | பா.ம.க |
| 5 | எம்.ஆர்.எஸ்.இளவழகன் | பா.ஜ.க |
| 6 | பா.ஜோதி | நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1977 - 2011)
| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
| 2011 | ம. சக்தி | அதிமுக |
| 2006 | M.பன்னீர்செல்வம் | திமுக |
| 2001 | N.சந்திரமோகன் | அதிமுக |
| 1996 | M.பன்னீர்செல்வம் | திமுக |
| 1991 | T.மூர்த்தி | அதிமுக |
| 1989 | M.பன்னீர்செல்வம் | திமுக |
| 1984 | பாலசுப்ரமணியம் | அதிமுக |
| 1980 | பாலசுப்ரமணியம் | அதிமுக |
| 1977 | K.சுப்ரவேலு | திமுக |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | பன்னீர்செல்வம்.M | திமுக | 58609 |
| 2 | துரைராஜன்.P | விடுதலைச் சிறுத்தைகள் கட்சி | 54818 |
| 3 | பாலகிருஷ்ணன் பொன் | தேமுதிக | 5143 |
| 4 | குணசேகரன்.N | மார்க்சியக் கம்யூனிசக் கட்சி | 1497 |
| 5 | முத்துபாலகிருஷ்ணன்.M | சுயேச்சை | 1260 |
| 6 | இளவழகன்.S | பாஜக | 1115 |
| 7 | தமிழ்மாறன்.K | சமாஜ்வாதி கட்சி | 996 |
| 8 | தேவேந்திரன்.S | பகுஜன் சமாஜ் கட்சி | 379 |
| 123817 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | சக்தி.M | அதிமுக | 83881 |
| 2 | துரைராஜன்.P | விடுதலைச் சிறுத்தைகள் கட்சி | 56502 |
| 3 | கலைவாணி.P | சுயேச்சை | 4018 |
| 4 | கனிவண்ணன்.M | சுயேச்சை | 3779 |
| 5 | குமாரராஜா.S | சுயேச்சை | 1721 |
| 6 | கிருஷ்ணராஜ்.M | பகுஜன் சமாஜ் கட்சி | 1331 |
| 7 | மாயவன்.A | சுயேச்சை | 1030 |
| 8 | கோபிநாத்.B | சுயேச்சை | 698 |
| 9 | கற்பகவள்ளி. S | சுயேச்சை | 601 |
| 153561 |