

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி | அதிமுக |
| பிரகாஷ் | திமுக |
| மாரே கவுடு | அமமுக |
| மசூத் | மக்கள் நீதி மய்யம் |
| அ.கீதாலட்சுமி | நாம் தமிழர் கட்சி |
தமிழகத்தின் வடமேற்கு நுழைவு வாயிலாக திகழும் ஓசூர் சட்டப்பேரவை தொகுதி, கடல் மட்டத்தில் இருந்து 2,883 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தொழிற்சாலைகளும் விவசாயமும் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் தொகுதியாக ஓசூர் உள்ளது. இந்த நகரைச் சுற்றிலும் வனம் மற்றும் மலைச்சார்ந்த பகுதிகள் நிறைந்துள்ளதால் குளுமையான தட்பவெட்ப நிலை மற்றும் மண் வளமும் நிறைந்த பகுதியாக உள்ளது.
ஓசூர் நகரின் குளுமையான தட்பவெட்ப நிலை மற்றும் வளம்மிக்க நிலப்பரப்பினால் கவரப்பட்ட ஆங்கிலேயர்கள் 19-ம் நூற்றாண்டில் சேலம் மாவட்ட தலைநகராக ஓசூரை உருவாக்கி இங்கிருந்து ஆட்சி புரிந்துள்ளனர். 1824-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 1,641.41 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பண்ணையும், ஓசூர் தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் உள்ள மூதறிஞர் ராஜாஜி நினைவு இல்லம் மற்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ள மூன்று மலைகளில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில், சந்திரசூடேஸ்வரர் கோயில், பிரம்மதேவர் கோயில் ஆகிய 3 மலைக்கோயில்களும் ஓசூருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
ஆண்டுக்கு சராசரியாக 822.30 மி.மீ. மழையளவு உள்ள ஓசூரில் மலர் மற்றும் காய்கறி உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. இங்கு விளையும் 30 வகையான வாசனை மிகுந்த தரமான ரோஜா, மல்லி, சாமந்தி, உள்ளிட்ட மலர்களுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு காணப்படுவதால் ஆண்டுக்கு சராசரியாக ரூ.500கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதேபோல ஓசூர் பகுதியில் விளையும் தக்காளி, கேரட், முள்ளங்கி, பீட்ரூட், பீன்ஸ், அவரை உள்ளிட்ட 72 வகையான காய்கறிகளை தினமும் தமிழகம் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். மேலும் மஞ்சள் பட்டு மற்றும் வெண்பட்டு உற்பத்தியிலும் ஓசூர் முன்னிலையில் திகழ்கிறது.
ஓசூரில் உள்ள சிப்காட்-1 மற்றும் சிப்காட் - 2 ஆகிய இரண்டு தொழிற்பேட்டைகளிலும் இயங்கி வரும் 300-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகள், 3 ஆயிரம் சிறு குறு தொழிற்சாலைகளில் குண்டூசி முதல் விமானம் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. நேரடியாக சுமார் 2லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 50 ஆயிரம் பேரும் வேலை வாய்ப்பை பெற்றுள்ள தொகுதியாக ஓசூர் விளங்குகிறது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 87.40 சதவீதம் பேர் ஓசூரில் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
பெரும்பான்மை சமுதாயம்:
ஓசூர் தொகுதி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநில எல்லையில் அமைந்துள்ளதால், பன்மொழி பேசும் மக்களை கொண்ட தொகுதியாக திகழ்கிறது. இங்கு கவுடா, ரெட்டி, வன்னியர், நாயுடு, எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பைச் சேர்ந்த மக்கள் பரவலாக உள்ளனர். தொழில் நிமித்தமாக குடியேறியுள்ள 50 சதவீதம் வெளிமாவட்ட மக்களும், 25 சதவீதம் கேரளா மற்றும் வட மாநில மக்களும் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
ஓசூர் தொகுதியில் ஓசூர்(மாநகராட்சி), பாகலூர், மத்திகிரி உள்ளிட்ட நகரப்பகுதிகளும், 40 வருவாய் கிராமங்களும் அடங்கி உள்ளன. தொரப்பள்ளி, பெலத்தூர், பேரிகை, ஜீமங்கலம், கெலவரப்பள்ளி, பேகேப்பள்ளி, மாரசந்திரம், அவலப்பள்ளி, கொத்தகொண்டப்பள்ளி, மத்தம் அக்ரஹாரம், அச்செட்டிப்பள்ளி, ஒன்னல்வாடி, முகலூர், நாரிகானப்புரம், முதுகானப்பள்ளி, மல்லசந்திரம், தேவீரப்பள்ளி, உட்பட 80-க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன.
தொகுதியின் பிரச்சினைகள் -
2019-ம் ஆண்டு பிப்ரவரியில் ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வந்தாலும், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படாத தொகுதியாகவே ஓசூர் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை.
விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான மலர் ஏற்றுமதி மையம், குளிர்சாதன கிடங்கு வசதி மற்றும் தொழிலாளர்களின் பிரதான கோரிக்கையான தொழிலாளர் வைப்புநிதி அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், ஓசூர் -ஜோலார்பேட்டை இடையே ரயில் பாதை இணைப்பு, விமான நிலையம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இங்குள்ள வாக்காளர்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் ஓசூர் நகரின் பிரதான சாலை சந்திப்புகளில் புதிய சிக்னல்கள் அமைக்கப்பட்டும் இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. சாலைகளில் பாதசாரிகளுக்கான நடைபாதைகள் இல்லை. போக்குவரத்து நெரிசல் அன்றாட நிகழ்வாக உள்ளது. ஓசூர் ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ஏரிக்கரை மற்றும் ராஜ கால்வாய்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகரித்து வரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸாரின் எண்ணிக்கை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளன.
கட்சிகளின் வெற்றி -
1951-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் 9 முறை காங்கிரஸ் கட்சியும், 2 முறை சுதந்திரா கட்சியும், ஒரு முறை ஜனதா தளமும், 2 முறை சுயேட்சை வேட்பாளரும், வெற்றி பெற்ற இந்த தொகுதியில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் முறையாக மாநில கட்சியான அதிமுக வேட்பாளர் பாலகிருஷ்ணரெட்டி வெற்றி பெற்றார். எனினும், கலவர வழக்கில் சிக்கிய அவர், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு காரணமாக, எம்எல்ஏ., பதவியை இழக்க நேரிட்டது. அவரது மனைவி ஜோதி, 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, திமுக வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,74,577 |
| பெண் | 1,66,010 |
| மூன்றாம் பாலினத்தவர் | 98 |
| மொத்த வாக்காளர்கள் | 3,40,685 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | பி.பாலகிருஷண்ரெட்டி | அதிமுக |
| 2 | கே.கோபிநாத் | காங்கிரஸ் |
| 3 | வி.சந்திரன் | தேமுதிக |
| 4 | பி.முனிராஜ் | பாமக |
| 5 | ஜி.பாலகிருஷ்ணன் | பாஜக |
| 6 | அலெக்ஸ்எஸ்தர் | நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
| 1951 | எம். முனி ரெட்டி | சுயேச்சை | 17850 | 53.9 |
| 1957 | கே. அப்பாவு பிள்ளை | சுயேச்சை | 10305 | 39.6 |
| 1962 | இராமசந்திர ரெட்டி | காங்கிரஸ் | 25577 | 64.46 |
| 1967 | பி. வெங்கடசாமி | சுதந்திரா | 21530 | 52.69 |
| 1971 | பி. வெங்கடசாமி | சுதந்திரா | 28259 | 63.81 |
| 1977 | என். இராமசந்திர ரெட்டி | காங்கிரஸ் | 30818 | 58.12 |
| 1980 | டி. வெங்கட ரெட்டி | காங்கிரஸ் | 25855 | 49.8 |
| 1984 | டி. வெங்கட ரெட்டி | காங்கிரஸ் | 35293 | 48.37 |
| 1989 | என். இராமசந்திர ரெட்டி | காங்கிரஸ் | 37934 | 39.78 |
| 1991 | கே. எ. மனோகரன் | காங்கிரஸ் | 47346 | 47.64 |
| 1996 | பி. வெங்கடசாமி | ஜனதா தளம் | 41456 | 34.89 |
| 2001 | கே. கோபிநாத் | காங்கிரஸ் | 45865 | 35.24 |
| 2006 | கே. கோபிநாத் | காங்கிரஸ் | 90647 | --- |
| 2011 | கே. கோபிநாத் | காங்கிரஸ் | 65034 | --- |
| ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
| 1951 | கே. அப்பாவு பிள்ளை | காங்கிரசு | 13863 | 41.86 |
| 1957 | என். இராமசந்திர ரெட்டி | காங்கிரசு | 9257 | 35.57 |
| 1962 | கே. சாமன்னா | சுதந்திரா | 14101 | 35.54 |
| 1967 | கே. எ. பிள்ளை | காங்கிரசு | 19329 | 47.31 |
| 1971 | டி. வெங்கட ரெட்டி | சுயேச்சை | 15063 | 34.01 |
| 1977 | கே. எஸ். கோதண்டராமையா | ஜனதா கட்சி | 13653 | 25.75 |
| 1980 | கே. எஸ். கோதண்டராமையா | சுயேச்சை | 21443 | 41.31 |
| 1984 | ஈ. வெங்கடசாமி | ஜனதா கட்சி | 15096 | 20.69 |
| 1989 | பி. வெங்கடசாமி | ஜனதா கட்சி | 35873 | 37.62 |
| 1991 | பி. வெங்கடசாமி | ஜனதா தளம் | 38600 | 38.84 |
| 1996 | டி. வெங்கட ரெட்டி | தமிழ் மாநில காங்கிரசு | 39719 | 33.43 |
| 2001 | பி. வெங்கடசாமி | பாஜக | 39376 | 30.25 |
| 2006 | வி. சம்பனகிரி ராமய்யா | அதிமுக | 78096 | --- |
| 2011 | ஜான்சன் | தேமுதிக | 50882 | --- |
| 2006 சட்டமன்ற தேர்தல் | 55. ஓசூர் | ||
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | K. கோபிநாத் | ஐ.என்.சி | 90647 |
| 2 | V. சம்பன்கிராமய்யா | அ.தி.மு.க | 78096 |
| 3 | B. வெங்கடசாமி | பி.ஜே.பி | 23514 |
| 4 | V. சந்திரன் | தே.மு.தி.க | 14401 |
| 5 | C. ராமசாமி | சுயேச்சை | 3375 |
| 6 | M. சித்ராம்பலம் | பி.எஸ்.பி | 2227 |
| 7 | N. கிருஷ்ணாரெட்டி | டி.என்.ஜே.சி | 1186 |
| 8 | A. பாட்ஷா | சுயேச்சை | 1092 |
| 9 | K. கவுரப்பா | சுயேச்சை | 868 |
| 215406 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
| 2011 சட்டமன்ற தேர்தல் | 55. ஓசூர் | ||
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | K. கோபிநாத் | ஐ.என்.சி | 65034 |
| 2 | S. ஜான் திமோதி | தே.மு.தி.க | 50882 |
| 3 | S.A. சத்யா | சுயேச்சை | 24639 |
| 4 | பாலகிருஷ்ணன் | பி.ஜே.பி | 19217 |
| 5 | சித்ராம்பலம் | சுயேச்சை | 6325 |
| 6 | S. ராம்தேவன் | சுயேச்சை | 2018 |
| 7 | G.C. ராமசாமி | சுயேச்சை | 1517 |
| 8 | H. சனாவுல்லா ஷெரீப் | பி.எஸ்.பி | 1430 |
| 9 | V. மஞ்சுநாத் | சுயேச்சை | 1044 |
| 172106 |