

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| ஆ. கஜா(எ) கஜேந்திரன் | அதிமுக |
| வரலட்சுமி மதுசூதனன் | திமுக |
| ஏ.சதீஷ்குமார் | அமமுக |
| எஸ்.முத்தமிழ்செல்வன் | மக்கள் நீதி மய்யம் |
| கி.சஞ்சீவிநாதன் | நாம் தமிழர் கட்சி |
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று செங்கல்பட்டு. தற்போது செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மிகப்பெரிய 2-வது தொழிற்பூங்காவை (சிப்காட்) உள்ளடக்கியது. இத்தொகுதி மறைமலைநகர், செங்கல்பட்டு நகராட்சி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி மற்றும் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கியது. மண்ணிவாக்கம், நெடுங்குன்றம் உள்ளிட்ட39 ஊராட்சிகள் உள்ளன.
இதில்தான் வண்டலூர் அறிஞர் உயிரிரியல் பூங்கா உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு கலைக்கல்லூரி, சட்டக்கல்லூரி மற்றும் ஏராளமான தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளும் அமைந்துள்ளன. தனியார் பள்ளிகளும் உள்ளன. புகழ்பெற்ற பன்னாட்டு கார் தொழிற்சாலைகளை உள்ளடக்கிய தொழிற்பூங்கா அமைந்துள்ளது. செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். மேலும், இந்துக்கள், முஸ்லிம்கள், பிற மாநிலத்தவர்கள் என பல்வேறு சமூகத்தினரும் வாழ்கிறார்கள். தகவல் தொழில்நுட்பம், வாகன உதிரிபாக பணியாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய தொகுதி இது.
இங்கு புறநகர் பேருந்து நிலையம் ரூ.400 கோடியில் கிளம்பாக்கத்தில் கட்டப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் ரூ.60 கோடியில் அமைக்கப்படுகிறது. ரூ.119 கோடியில் அனைத்துத் துறைகளும் அமையும் வகையில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது.
தலைநகர் சென்னையை, தென்மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய ரயில்நிலையமாக செங்கல்பட்டு ரயில் நிலையம் விளங்குவதால், தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் செங்கல்பட்டு நகரப்பகுதிக்கு வராமல் சென்னைக்கு செல்ல முடியாது. மேலும், பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
தொகுதியில் நீண்டகால பிரச்சினைகளுக்குக் குறைவில்லை. செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடை வசதியில்லாததே முதன்மையான பிரச்சினையாக கருதப்படுகிறது. நகரப்பகுதியின் உள்ளே அமைந்துள்ள ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் ரயில் நிலையம், பேருந்து நிலையத்தின் இணைப்பு பகுதியில் சுரங்கப்பாதை, 50 ஆண்டு காலமாக நகரப்பகுதி விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளதால், நகரத்தை விரிவுபடுத்தி அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் ரவுண்டான ஏற்படுத்துவது தொடர்பான கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைக்கின்றனர். இங்கு மேம்பாலம் பாதியில் பல ஆண்டுகளாக கட்டப்பபடாமல் உள்ளன.
செங்கல்பட்டில் கோட்டையை சீரமைக்க வேண்டும், கொளவாய் ஏரி சீரமைத்து படகு சவாரி விட வேண்டும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனியில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
கடந்த 1967 முதல் 2016 வரை நடைபெற்ற 11 சட்டப்பேரவை தேர்தல்களில், அதிமுகவும், திமுகவும் தலா 4 முறை வெற்றிபெற்றுள்ளன. பாமக இரண்டுமுறையும் தேமுதிக ஒருமுறையும் வென்றுள்ளது.
2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. திமுக சார்பில் போட்டியிட்ட ம. வரலட்சுமி 1,12,675 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆர்.கமலகண்ணன் 86,383 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 2,05,490 |
| பெண் | 2,11,995 |
| மூன்றாம் பாலினத்தவர் | 52 |
| மொத்த வாக்காளர்கள் | 4,17,537 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | ஆர்.கமலகண்ணன் | அதிமுக |
| 2 | ம.வரலட்சுமி | திமுக |
| 3 | டி.முருகேசன் | தேமுதிக |
| 4 | கி.ஆறுமுகம் | பாமக |
| 5 | எஸ்.முத்தமிழ்செல்வன் | ஐஜேகே |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
| 1952 | விநாயகம் | கிஷான் மஸ்தூர் பிரஜா |
| 1957 | முத்துசாமி நாயக்கர் மற்றும் அப்பாவு | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 1962 | விஸ்வநாதன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1967 | விஸ்வநாதன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
| 1971 | விஸ்வநாதன் | திமுக |
| 1977 | ஆனூர் ஜெகதீசன் | அதிமுக |
| 1980 | ஆனூர் ஜெகதீசன் | அதிமுக |
| 1984 | ஆனூர் ஜெகதீசன் | அதிமுக |
| 1989 | தமிழ்மணி | திமுக |
| 1991 | வரதராஜன் | அதிமுக |
| 1996 | தமிழ்மணி | திமுக |
| 2001 | ஆறுமுகம் | பாமக |
| 2006 | ஆறுமுகம் | பாமக |
| 2011 | டி.முருகேசன் | தேமுதிக |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | K.ஆறுமுகம் | பாமக | 61664 |
| 2 | S.ஆறுமுகம் | அதிமுக | 51451 |
| 3 | மஞ்சுளா | தேமுதிக | 8852 |
| 4 | ஜீவரத்தினம் | சுயேச்சை | 1880 |
| 5 | பிரகாஷ் பாபு | சுயேச்சை | 871 |
| 6 | ஸ்ரீராம் | பிஜேபி | 736 |
| 7 | ஆமூர் பீமா ராவ் | பி எஸ் பி | 575 |
| 8 | வேதபுரி | பி என் கே | 315 |
| 9 | துரைராஜ் | சுயேச்சை | 261 |
| 10 | பரமசிவம் | டி என் ஜே சி | 179 |
| 11 | துளசியம்மாள் | எஸ் பி | 175 |
| 12 | கோவிந்தன் | சுயேச்சை | 142 |
| 13 | அரசன் | சுயேச்சை | 129 |
| 14 | சிட்டி பாபு | சுயேச்சை | 123 |
| 15 | அருணகிரி | சுயேச்சை | 122 |
| 127475 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | D. முருகேசன் | தேமுதிக | 83297 |
| 2 | V. G.ரங்கசாமி | பாமக | 83006 |
| 3 | பன்னீர்செல்வம் | எஜேஎம்கே | 4124 |
| 4 | ராகவன் | பிஜேபி | 4073 |
| 5 | முருகன் | சுயேச்சை | 3597 |
| 6 | முத்தமிழ்செல்வன் | ஐ ஜே கே | 3265 |
| 7 | துரைராஜ் | பி எஸ் பி | 1167 |
| 8 | சோமசுந்தரம் | பு பா | 1040 |
| 9 | வெங்கடேசன் | சுயேச்சை | 902 |
| 10 | அயனாரப்பன் | சுயேச்சை | 641 |
| 11 | குப்பன் | சுயேச்சை | 419 |
| 12 | மகாதேவன் | சுயேச்சை | 321 |
| 13 | கோபாலகிருஷ்ணன் | சுயேச்சை | 283 |
| 14 | கனகராஜ் | சுயேச்சை | 271 |
| 15 | சிட்டிபாபு | சுயேச்சை | 271 |
| 16 | சந்திரன் | சுயேச்சை | 190 |
| 186867 |