

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| சின்னய்யா | அதிமுக |
| எஸ் .ஆர்.ராஜா | திமுக |
| கரிகாலன் | அமமுக |
| சிவ இளங்கோ | மக்கள் நீதி மய்யம் |
| த.சுரேஷ்க குமார் | நாம் தமிழர் கட்சி |
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று தாம்பரம் தொகுதி. கடந்த 1977-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மாவட்டத்தில் மிகப்பெரிய தொகுதியாக இருந்துவந்த தாம்பரம் தொகுதி கடந்த 2011-ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது தாம்பரம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளாக பிரிக்கப்பட்டு சிறிய தொகுதியாக சுருங்கிவிட்டது. இத்தொகுதியில், தாம்பரம், செம்பாக்கம் நகராட்சிகள், சிட்லப்பாக்கம், செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை பேரூராட்சிகள், புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம், முடிச்சூர், அகரம்தென், கஸ்பாபுரம், வெங்கம்பாக்கம், மதுரைப்பாக்கம், திருவஞ்சேரி ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. தாம்பரம், சென்னையின் நுழைவு வாயிலாக திகழ்கிறது.
மிகவும் பழமைவாய்ந்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரி உள்பட ஏராளமான கலை அறிவியல் கல்லூரிகளையும், ஏராளமான தனியார் பொறியியல், மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்திய விமானப்படை தளமும் இங்குள்ளது.
தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பிற மாநிலத்தவர்கள் என பல்வேறு சமூகத்தினர் வாழ்கிறார்கள். அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவு வசிக்கிறார்கள். மேலும், பாதுகாப்பு படையினரும், முன்னாள் பாதுகாப்பு படையினரும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
தொகுதியில் நீண்டகால பிரச்சினைகளுக்குக் குறைவில்லை. தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் தினமும் காலையும் மாலையும் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல்தான் முதன்மையான பிரச்சினையாக கருதப்படுகிறது. தாம்பரம் நகராட்சியில் அரைகுறையாக இருக்கும் பாதாளச் சாக்கடை திட்டம், முக்கிய சாலைகளான ஜிஎஸ்டி சாலை, வேளச்சேரி சாலை, முடிச்சூர் சாலையில் ஏற்படும் போக்குவாத்து நெரிசல், சண்முகம் சாலையை ஜிஎஸ்டி சாலையுடன் இணைப்பது, வேளச்சேரி சாலையில் கேம்ப்ரோடு சந்திப்பு, ராஜகீழ்பாக்கம் சந்திப்பு இடங்களில் மேம்பாலம் என பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் முன்வைக்கிறார்கள்.
மேலும் செம்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்டம், தொகுதியில் உள்ள உள்ளாட்சிகளில் குப்பைகள் அகற்ற போதிய திட்டம் இல்லை. பெருங்களத்தூர், மாடம்பாக்கத்தில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கையும் உள்ளன. மேலும் அடையாறு ஆற்றில் இருந்து தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க நிரந்தர திட்டம் தேவையாக உள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க வேண்டும் என கோரிக்கையும் உள்ளன.
கடந்த 1977 முதல் 2011 வரை நடைபெற்ற 9 சட்டப்பேரவை தேர்தல்களில், 6 முறை திமுகவும் 3 முறை அதிமுகவும் வெற்றிபெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி ஒருமுறை (1991) வென்றது. கடந்த 2016-ல் நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர். ராஜா 1,01,835 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் 87,390 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,97,885 |
| பெண் | 1,99,528 |
| மூன்றாம் பாலினத்தவர் | 46 |
| மொத்த வாக்காளர்கள் | 3,97,459 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | சிட்லபாக்கம் சி.ராஜேந்திரன் | அதிமுக |
| 2 | எஸ்.ஆர்.ராஜா | திமுக |
| 3 | எம்.செழியன் | தேமுதிக |
| 4 | ஆர்.சுரேஷ் | பாமக |
| 5 | ஏ.வேதசுப்ரமணியம் | பாஜக |
| 6 | பி.நாகநாதன் | நாம் தமிழர் |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 – 2011 )
| ஆண்டு | வேட்பாளர் | கட்சி |
| 1977 | முனுஆதி | அதிமுக |
| 1980 | பம்மல் நல்லதம்பி | திமுக |
| 1984 | ராஜ மாணிக்கம் | அதிமுக |
| 1989 | வைத்தியலிங்கம் | திமுக |
| 1991 | கிருஷ்ணன் | காங்கிரஸ் |
| 1996 | வைத்தியலிங்கம் | திமுக |
| 2001 | வைத்தியலிங்கம் | திமுக |
| 2006 | எஸ்.ஆர். ராஜா | திமுக |
| 2011 | டி. கே. எம். சின்னையா | அதிமுக |
2006 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | S.R.ராஜா | திமுக | 269717 |
| 2 | சோமு | மதிமுக | 220965 |
| 3 | தர்மா | தேமுதிக | 48522 |
| 4 | சிவராமன் | பிஜேபி | 13598 |
| 5 | வெங்கடேசன் | சுயேச்சை | 2249 |
| 6 | அக்பர் | டி என் ஜே சி | 1403 |
| 7 | சேகர் | எஸ் பி | 1179 |
| 8 | மோகன் | சுயேச்சை | 729 |
| 9 | சலீம் | சுயேச்சை | 682 |
| 10 | எலிசபெத் ராணி | சுயேச்சை | 581 |
| 11 | ராஜேஷ் | சுயேச்சை | 555 |
| 12 | மணிகண்டன் | சுயேச்சை | 427 |
| 13 | பக்கிரி | சுயேச்சை | 392 |
| 14 | பால்ராஜ் | சுயேச்சை | 372 |
| 15 | நந்தகுமார் | சுயேச்சை | 275 |
| 16 | கிருஷ்ணன் | சுயேச்சை | 242 |
| 561888 |
2011தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | T. K. M. சின்னையா | அதிமுக | 91702 |
| 2 | S.R.ராஜா | திமுக | 77718 |
| 3 | வேத சுப்பிரமணியம் | பிஜேபி | 3061 |
| 4 | ஜார்ஜ் | MGRTK | 1449 |
| 5 | ராஜு | ஐஜேகே | 955 |
| 6 | மின்னல் ஸ்ரீநிவாசன் | சுயேச்சை | 602 |
| 7 | காலனி சுந்தர் | சுயேச்சை | 566 |
| 8 | கிருஷ்ண பாபு | எல் எஸ் பி | 565 |
| 9 | மாரிமுத்து | பி எஸ் பி | 408 |
| 10 | நந்தகுமார் | சுயேச்சை | 293 |
| 11 | ரவிச்சந்திரன் | எஸ்எச்எஸ் | 237 |
| 12 | பாலகிருஷ்ணன் | எம்எம்கேஏ | 160 |
| 13 | ஞானசேகர் | சுயேச்சை | 159 |
| 14 | சத்யநாராயணன் | சுயேச்சை | 137 |
| 15 | காமராஜ் | சுயேச்சை | 128 |
| 16 | சூரியநாராயணன் | சுயேச்சை | 90 |
| 178230 |