

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| ஏ. சோமசுந்தரம் | அதிமுக |
| க.சுந்தர் | திமுக |
| ஆர்.பி.ரஞ்சித்குமார் | அமமுக |
| சூசையப்பர் | மக்கள் நீதி மய்யம் |
| சீ.காமாட்சி | நாம் தமிழர் கட்சி |
குடவோலை முறையில் முதல் தேர்தல் நடைபெற்றதற்கான கல்வெட்டு ஆதாரங்களை கொண்ட தொகுதி உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட தொகுதி. இந்தத் தொகுதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது.
செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், வந்தவாசி, செய்யாறு, காஞ்சிபுரம், அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக உள்ளன.
இந்தத் தொகுதியில் கடந்த நவம்பர் (2020) 16-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி ஒரு லட்சத்துக்கு 23 ஆயிரத்துக்கு 253 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 321 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 31 பேர் என மொத்தம் மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்துக்கு 605 வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
உத்திரமேரூர் வட்டம்
காஞ்சிபுரம் வட்டம் (பகுதி)
வள்ளுவப்பாக்கம், பூசிவாக்கம், ஊத்துக்காடு, கட்டவாக்கம், விளாகம், தாழயம்பட்டு, அளவூர், வாரணவாசி, வெம்பாக்கம், சின்னமதுரப்பாக்கம், ஆரம்பாக்கம், தொள்ளாழி, கோசப்பட்டு, தேவரியம்பாக்கம், தோணங்குளம், உள்ளாவூர், பழையசீவரம், நத்தநல்லூர், புளியம்பாக்கம், வெங்குடி, கீழ் ஒட்டிவாக்கம், சீயமங்கலம், திம்மராஜம்பேட்டை, பாவாசாகிப்பேட்டை, தாங்கி, ஏகனம்பேட்டை, நாயக்கன்பேட்டை, வில்லிவலம், கோயம்பாக்கம், ஏரிவாய், திம்மைய்யன்பேட்டை, முத்தியால்பேட்டை, படப்பம், சின்னய்யங்குளம், கோட்டக்காவல், ஓரிக்கை, கோளிவாக்கம், அய்யங்கார்குளம், புஞ்சரசந்தாங்கல், வளத்தோட்டம், கமுகம்பள்ளம், குருவிமலை, விச்சந்தாங்கல், காலூர், ஆசூர், அவளூர், அங்கம்பாக்கம், தம்மனூர், மேல்புத்தூர், கொளத்தூர், பெருமாநல்லூர், வேடல், களக்காட்டூர், தலையில்லாப்பெரும்பாக்கம், ஆர்ப்பாக்கம், மாகரல், காவாந்தண்டலம், நெல்வேலி, கீழ்புத்தூர், கம்பராஜபுரம், இளையணார்வேலூர், சித்தாத்தூர், மஞ்சமேடு, சூரமேனிக்குப்பம், அயிமிச்சேரி, கோவளமேடு, நாவட்டிக்குளம், திருவங்கரணை, குண்ணவாக்கம், அகரம், தென்னேரி, மடவிளாகம், சிறுபாகல், ஒட்டந்தாங்கல், நாயக்கன்குப்பம், சின்னிவாக்கம், வடவேரிப்பட்டு, மருதம் மற்றும் புத்தகரம் கிராமங்கள் தேனம்பாக்கம் (சென்சஸ் டவுன்), ஐயம்பேட்டை (சென்சஸ் டவுன்), மற்றும் வாலாஜாபாத் (பேரூராட்சி). இந்தத் தொகுதி உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள கிராமங்களையும், வாலாஜாபாத், காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பகுதி அளவிலான கிராமங்களையும் உள்ளடக்கியது. வாலாஜாபாத், உத்திரமேரூர் பேரூராட்சிகளும் இந்தத் தொகுதியில் வருகின்றன.
இந்தத் தொகுதி பிரதானமாக விவசயாத்தை அடிப்படையாக கொண்ட தொகுதி. இதனால் விவசாயத் தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். குடவோலை முறையில் தேர்தல் நடைபெற்றதற்காக ஆதாரங்களை குறிக்கும் கல்வெட்டுகளைக் கொண்ட வைகுண்ட பெருமாள் கோயில் இந்தத் தொகுதியில் உள்ளது. இந்தத் தொகுதியில் வன்னியர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அதிக அளவில் உள்ளன. மற்ற சமூகத்தினர் அனைவரும் பரவலாக கலந்துள்ளனர்.
தொகுதி பிரச்சினைகள்
இந்த தொகுதியில் விவசாயத்துக்கு முக்கிய ஆதரமான உத்திரமேரூர் ஏரி உள்ளது. இந்த ஏரிக் கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால் மழை பெய்தாலும் ஏரிக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் உள்ளது. இந்த ஏரிக் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்தத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் கல்குவாரிகள் கட்டுபாடற்ற முறையில் செயல்படுகின்றன. கல்குவாரிகளுக்கு அதிக எடை ஏற்றிச் செல்லும் லாரிகளால் சாலைகள் மோசமடைந்ததுடன், விபத்துகளும் நடைபெறுகின்றன. கல்குவாரிகளை முறைப்படுத்த வேண்டும் என்பதும் இந்தத் தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்தத் தொகுதியில் 1971-ம் ஆண்டில் இருந்து 6 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட க.சுந்தர் 85513 வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன் 75357 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,23,253 |
| பெண் | 1,31,321 |
| மூன்றாம் பாலினத்தவர் | 31 |
| மொத்த வாக்காளர்கள் | 2,54,605 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | பா.கணேசன் | அதிமுக |
| 2 | க.சுந்தர் | திமுக |
| 3 | மு.இராஜேந்திரன் | தேமுதிக |
| 4 | பொன்.கங்காதரன் | பாமக |
| 5 | வே.புருஷோத்தமன் | பாஜக |
| 6 | இரா.சூசைராஜ் | நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள்
| தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி |
| 1952 | ராமசாமி முதலியார் | காங் |
| 1957 | ராமசாமி முதலியார் | சுயே |
| 1962 | சீனிவாச ரெட்டியார் | காங் |
| 1967 | ராசகோபால் | திமுக |
| 1977 | பாகூர் சுப்பிரமணியன் | அதிமுக |
| 1980 | ஜெகத்ரட்சகன் | அதிமுக |
| 1984 | நரசிம்ம பல்லவன் | அதிமுக |
| 1989 | சுந்தர் | திமுக |
| 1991 | காஞ்சி பன்னீர்செல்வம் | அதிமுக |
| 1996 | சுந்தர் | திமுக |
| 2001 | சோமசுந்தரம் | அதிமுக |
| 2006 | சுந்தர் | திமுக |
| 2011 | கணேசன் | அதிமுக |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண்2 | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | K.சுந்தர் | திமுக | 70488 |
| 2 | சோமசுந்தரம் | அதிமுக | 58472 |
| 3 | முருகேசன் | தேமுதிக | 10335 |
| 4 | வெங்கடேசன் | சுயேச்சை | 2070 |
| 5 | லக்ஷ்மி நரசிம்மன் | சுயேச்சை | 1043 |
| 6 | ராஜவேலு | பிஜேபி | 1010 |
| 7 | ஞானசேகரன் | எஸ் பி | 256 |
| 8 | நாகப்பன் | எல்ஜே பி | 217 |
| 9 | ராமநாதன் நாயக்கர் | வி எ கே | 200 |
| 10 | ராஜேந்திரன் | சுயேச்சை | 186 |
| 11 | சண்முகம் | சுயேச்சை | 166 |
| 12 | கார்த்திகேயன் | சுயேச்சை | 153 |
| 144596 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
| 2011 சட்டமன்ற தேர்தல் | 36. உத்திரமேரூர் | ||
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | P. கணேசன் | அ.தி.மு.க | 86912 |
| 2 | பொன்குமார் | தி.மு.க | 73146 |
| 3 | M. மோகனவேலு | சுயேட்சை | 1917 |
| 4 | K. குருமூர்த்தி | பி.ஜே.பி | 1407 |
| 5 | M.J. ஆரோக்கியசாமி | சுயேட்சை | 1133 |
| 6 | V. தெய்வசிகாமணி | சுயேட்சை | 1063 |
| 7 | V.D. ராஜன் | பி.எஸ்.பி | 803 |
| 8 | R. முத்துகுமார் | சுயேட்சை | 352 |
| 9 | K. சரவணன் | சுயேட்சை | 346 |
| 10 | K. எத்தியப்பன் | பி.பி | 260 |
| 11 | G. மோகனசுந்தரம் | ஐ.ஜே.கே | 214 |
| 12 | A. கலிங்கம் | சுயேட்சை | 121 |
| 13 | E. தனம் | எ.ஐ.ஜே.எம்.கே | 106 |
| 14 | L. கருணகரன் | சுயேட்சை | 92 |
| 15 | S. இளங்கோவன் | சுயேட்சை | 74 |
| 167946 |