98 - ஈரோடு கிழக்கு

ஈரோடு மாநகராட்சி அலுவலகம்
ஈரோடு மாநகராட்சி அலுவலகம்
Updated on
2 min read

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
யுவராஜா (தமாகா) அதிமுக
திருமகன் ஈவேரா (காங்கிரஸ்) திமுக
வக்கீல் சம்பத் (எ) எஸ்.ஏ.முத்துக்குமரன் அமமுக
ஏ.எம்.ஆர். ராஜ்குமார் மக்கள் நீதி மய்யம்
ச.கோமதி நாம் தமிழர் கட்சி

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அடங்கிய நகரம் சார்ந்த தொகுதி. நெசவாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள் பரவலாக உள்ளனர். கொங்கு வேளாளக் கவுண்டர், முதலியார் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். முஸ்லீம் மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த கணிசமான வாக்காளர்கள் இத்தொகுதியில் உள்ளனர்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், ஜவுளிச்சந்தை, காய்கறிச்சந்தை, கடை வீதி, கல்வி நிலையங்கள் என நகரின் பிரதான பகுதிகள் தொகுதிக்குள் அடங்கியுள்ளன.

இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க கட்டப்பட்ட மேம்பாலத்தால் பயனில்லை என்ற அதிருப்தி வாக்காளர்களிடையே நிலவுகிறது. சேதமடைந்த சாலைகள், பாதாளச் சாக்கடைப் பிரச்சினைகள், விசைத்தறி மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லாதது, மாநகராட்சி வரிவிதிப்பில் உள்ள சிக்கல் போன்றவை தீர்க்கப்படாத பிரச்சினைகளாக தொடர்கிறது. கரோனா தடுப்புப் பணிகள், அரசு நலத்திட்டப் பணிகள் போன்றவை பாராட்டுதல்களைப் பெற்றுள்ளன. ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டப் பணிகள் இதுவரை முடிவடையாததால், குடிநீர் தேவையை முழுமையாக தீர்க்க முடியாத நிலை தொடர்கிறது.

கடந்த 1984-ம் ஆண்டு அதிமுகவும், 89-ம் ஆண்டு திமுகவும், 1991-ம் ஆண்டு அதிமுகவும், 1996-ம் ஆண்டு திமுகவும், 2001-ம் ஆண்டு அதிமுகவும், 2006-ம் ஆண்டு திமுகவும், 2011-ம் ஆண்டு தேமுதிகவும் வென்ற தொகுதி.

இந்நிலையில், 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தேமுதிக எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார், அக்கட்சியில் இருந்து விலகி, மக்கள் தேமுதிக என்ற பெயரில், திமுக ஆதரவுடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றார்.

20020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,04,635

பெண்

1,08,063

மூன்றாம் பாலினத்தவர்

5

மொத்த வாக்காளர்கள்

2,12,703

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே.எஸ்.தென்னரசு

அதிமுக

2

வி.சி.சந்திரகுமார்

மக்கள் தேமுதிக

3

பி.பொன்சேர்மன்

தேமுதிக

4

பி. ராஜேந்திரன்

பாமக

5

பி. ராஜேஸ்குமார்

பாஜக

6

ஏ. அலாவூதீன்

நாம் தமிழர்

7

எஸ். ஜெகநாதன்

கொமதேக

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

பிராமண பெரிய அக்ரஹாரம் (பேரூராட்சி) ஈரோடு (நகராட்சி) மற்றும் வீரப்பன்சத்திரம் (பேருராட்சி)

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

V.C. சந்திரகுமார்

தே.மு.தி.க

69166

2

S. முத்துசாமி

தி.மு.க

58522

3

P. ராஜேஷ்குமார்

பி.ஜே.பி

3244

4

R. மின்னல் முருகேஷ்

சுயேட்சை

2439

5

C. மாயவன்

பி.எஸ்.பி

628

6

S. சங்கமித்திரை

சுயேச்சை

456

7

G. கருணாநிதி

சுயேச்சை

441

8

S. செல்வராஜ்

சுயேச்சை

408

9

A.R. நாகராஜன்

சுயேச்சை

363

10

G. தயாலன்

சுயேச்சை

214

11

A. சிராஜ்

சுயேச்சை

190

136071

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in