

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| திண்டுக்கல் ஊ. சீனிவாசன் | அதிமுக |
| என்.பாண்டி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) | திமுக |
| ராமதேவர் | அமமுக |
| ராஜேந்திரன் | மக்கள் நீதி மய்யம் |
| இரா.ஜெயசுந்தர் | நாம் தமிழர் கட்சி |
திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் திண்டுக்கல் ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன.
திண்டுக்கல்லுக்கு பெயர் வாங்கித்தந்த பூட்டுத்தொழிலை நசிவில் இருந்து காப்பற்றவேண்டும் என பூட்டு தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கை இன்றவும் தொடர்கிறது. தோல் தொழிற்சாலைகள் பெரும்பாலவை மூடப்பட்டுவிட்டன. தொழிற்சாலைகள் நிறைந்த இருந்ததால் தொழிலாளர்கள் நிறைந்த நகரமாக திண்டுக்கல் இருந்தது. தற்போது தொழில்கள் சுருங்கிவிட்டதால் இங்குள்ள தொழிலாளர்கள் வெளிமாவட்டங்களுக்கு வேலை தேடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இருக்கும் தொழில்களை காப்பாற்றவும், புதிய தொழில்கள் தொடங்கும் அரசு நடவடிக்கை எடுத்தால் திண்டுக்கல் தொழிலாளர்கள் பிற மாவட்டங்களுக்கு செல்லும் நிலை ஏற்படாது என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. திண்டுக்கல் நகருக்கு அருகே செல்லும் குடகனாற்றில் கழிவுநீர் செல்வதால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் நிலத்தடிநீர் மட்டமும் மாசுபட்டுள்ளது.
திண்டுக்கல் நகரின் முக்கிய பிரச்சனையாக உள்ளது போக்குவரத்து நெரிசல். இதற்கு தீர்வாக பேருந்துநிலையத்தை நகருக்கு வெளியே கொண்டுசெல்லவேண்டும் என வர்த்தக சங்கங்களின் கோரிக்கைகள் இன்றளவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் இருந்து திண்டுக்கல் நகருக்கு குடிநீர் கொண்டுவர எம்.ஜி.ஆர்., காலத்தில் கொண்டுவரப்பட்ட பேரணைத்திட்டம் முடங்கியுள்ளது. இதை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவந்தால் வழியோர கிராமங்களும் பயன்பெறும். திண்டுக்கல் நகருக்கு கூடுதல் குடிநீர் கிடைக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
1977 முதல் நடந்த தேர்தல்களில் இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆறு முறையும், அதிமுக மூன்று முறையும், திமுக ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது. தற்போது எம்.எல்.ஏ.,வாக திண்டுக்கல் சி.சீனிவாசன் உள்ளார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 12,97,81 |
| பெண் | 13,69,59 |
| மூன்றாம் பாலினத்தவர் | 44 |
| மொத்த வாக்காளர்கள் | 26,67,84 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | சி.சீனிவாசன் | அதிமுக |
| 2 | எம்.பஷீர்அகமது | திமுக |
| 3 | என்.பாண்டி | மார்க்சிஸ்ட் கம்யூ |
| 4 | ஆர்.பரசுராமன் | பாமக |
| 5 | டி.ஏ.திருமலைபாலாஜி | பாஜக |
| 6 | பா.கணேசன் | நாம் தமிழர் |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
| 2006 சட்டமன்ற தேர்தல் | 132. திண்டுக்கல் | ||
| வ எண் | பெயர் | கட்சி | வாக்குகள் |
| 1 | K. பாலபாரதி | சி.பி.ஐ | 66811 |
| 2 | N. செல்வராகவன் | ம.தி.மு.க | 47862 |
| 3 | G. கார்த்திகேயன் | தே.மு,தி.க | 27287 |
| 4 | J.C.D. பிரபாகர் | எஸ்.பி | 2970 |
| 5 | T.A. திருமலை பாலாஜி | பி.ஜே.பி | 2134 |
| 6 | K. சிவானந்தன் | பி.எஸ்.பி | 1290 |
| 7 | M. முத்துவீரன் | ஆர்.எஸ்.பி | 1154 |
| 8 | M. அருணச்சலம் | பா.ம.க | 1107 |
| 9 | A. பழனிசாமி | சுயேச்சை | 1045 |
| 10 | S. தனிக்கொடி | எ.ஐ.எப்.பி | 632 |
| 11 | N. நாகசாமி நாடார் | ஜே.டி | 456 |
| 152748 |
| 2011 சட்டமன்ற தேர்தல் | 132. திண்டுக்கல் | ||
| வ எண் | பெயர் | கட்சி | வாக்குகள் |
| 1 | K. பாலபாரதி | சி.பி.எம் | 86932 |
| 2 | J. பால் பாஸ்கர் | பாமக | 47817 |
| 3 | P.G. போஸ் | பி.ஜே.பி | 5761 |
| 4 | V. கணேசன் | எ.பி.எச்.எம் | 2014 |
| 5 | M. பழனிசாமி | சுயேச்சை | 1107 |
| 6 | M. முத்துவீரன் | அர்.எஸ்.பி | 945 |
| 7 | P. பாஸ்கரன் | பி.எஸ்.பி | 711 |
| 8 | S. நாகேந்திரன் | ஐ.ஜே.கே | 586 |
| 9 | M. நாகூர் கனி | சுயேச்சை | 502 |
| 10 | A. அபுதாஹிர் | சுயேச்சை | 271 |
| 11 | A. நாக்கனிகா | சுயேச்சை | 270 |
| 12 | I. செல்வராஜ் | எ.ஐ.ஜே.எம்.கே | 258 |
| 13 | S. கிரேசி மேஸ்ரல்லோ | சுயேச்சை | 241 |
| 14 | P. ஆரோக்கியசாமி | பு.பா | 232 |
| 15 | S. கார்த்திகேயன் | சுயேச்சை | 158 |
| 147805 |