

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| தேன்மொழி | அதிமுக |
| முருகவேல் ராஜன் | திமுக |
| கே.ராமசாமி | அமமுக |
| ஆனந்த் | மக்கள் நீதி மய்யம் |
| க.வசந்தாதேவி | நாம் தமிழர் கட்சி |
நிலக்கோட்டை சட்டசபை தொகுதியில் நிலக்கோட்டை ஒன்றியம், வத்தலகுண்டு ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகள். நிலக்கோட்டை, வத்தலகுண்டு, அம்மையநாயக்கனூர், சேவுகம்பட்டி, பட்டிவீரன்பட்டி ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. தொகுதியில் வைகை ஆறு ஓடினாலும் கிராமப்புறங்களில் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. மூன்று மாதங்கள் மட்டுமே ஆற்றில் தண்ணீர் செல்லும் என்பதால் கோடை காலத்தில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து குடிநீர் விநியோகம் செய்யும் ஆழ்துளை கிணறுகள் வறண்டு குடிநீர் பிரச்சனைக்கு வழிவகுக்கும். இந்த தொகுதியில் குடிநீர் பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படவில்லை. தொகுதி முழுவதும் பூ விவசாயம் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் இருந்தபோது மதுரை மல்லி என பெயர் பெற்றுத்தந்ததே நிலக்கோட்டை தான்.
இங்கிருந்து பூக்கள் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு போதிய வசதிகள் இல்லை. பூக்கள் அதிகம் விளையும் பகுதி என்பதால் சென்ட் தொழிற்சாலை அமைக்கவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
1977 முதல் இடைத்தேர்லுடன் சேர்த்து நடைபெற்ற 11 தேர்தல்களில் அதிமுக ஆறு முறை வென்றுள்ளது. ஏ.எஸ்.பொன்னம்மாள் காங்கிரஸ் சார்பில் மூன்றுமுறையும், சுயேச்சையாக ஒரு முறையும் வெற்றிபெற்றார். 2011 தேர்தலில் புதியதமிழகம் கட்சி வெற்றிபெற்றது.
2019 ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தேன்மொழி வெற்றிபெற்று எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 11,53,37 |
| பெண் | 11,91,51 |
| மூன்றாம் பாலினத்தவர் | 5 |
| மொத்த வாக்காளர்கள் | 23,44,93 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | ஆர்.தங்கத்துரை | அதிமுக |
| 2 | மு.அன்பழகன் | திமுக |
| 3 | கே.ராமசாமி | தேமுதிக |
| 4 | என்.ராமமூர்த்தி | பாமக |
| 5 | ஆர்.அழகுமணி | பாஜக |
| 6 | அ.சங்கிலிபாண்டியன் | நாம் தமிழர் |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
| 2006 சட்டமன்ற தேர்தல் | 130. நிலக்கோட்டை | ||
| வ எண் | பெயர் | கட்சி | வாக்குகள் |
| 1 | S. தேன்மொழி | அ.தி.மு.க | 53275 |
| 2 | K. செந்தில்வேல் | காங்கிரஸ் | 46991 |
| 3 | M. ரவிச்சந்திரன் | தே.மு.தி.க | 16795 |
| 4 | P. பிச்சையம்மாள் | பி.ஜே.பி | 1422 |
| 5 | A. சேதுராமன் | பி.எஸ்.பி | 1311 |
| 6 | S. பிரகலாதன் | சுயேட்சை | 1197 |
| 7 | P. நல்லுசாமி | எஸ்.பி | 466 |
| 8 | R. நடராஜன் | சுயேச்சை | 419 |
| 9 | V. தனலக்ஷ்மி | சுயேச்சை | 374 |
| 10 | C. செந்தில்குமார் | சுயேச்சை | 307 |
| 11 | S. ராஜேந்திரன் | எல்.சி.பி | 281 |
| 122838 |
| 2011 சட்டமன்ற தேர்தல் | 130. நிலக்கோட்டை | ||
| வ எண் | பெயர் | கட்சி | வாக்குகள் |
| 1 | A. ராமசாமி | புதிய தமிழகம் | 75124 |
| 2 | K. ராஜங்கம் | காங்கிரஸ் | 50410 |
| 3 | B. ஜான்பாண்டியன் | டி.எம்.எம்.கே | 6882 |
| 4 | V. சின்னப்பன் | பி.ஜே.பி | 3952 |
| 5 | S. செல்வராஜ் | எல்.ஜே.பி | 2440 |
| 6 | S. சிவகுமார் | சுயேச்சை | 1869 |
| 7 | T. சிவபாலன் | ஐ.ஜே.கே | 1669 |
| 8 | P. பிச்சையம்மாள் | பி.எஸ்.பி | 897 |