

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| அன்பழகன் | அதிமுக |
| பி.கே.முருகன் | திமுக |
| பி.விஜயசங்கர் | அமமுக |
| ராஜசேகர் | மக்கள் நீதி மய்யம் |
| க.கலைச்செல்வி | நாம் தமிழர் கட்சி |
தமிழக உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சராக உள்ள கே.பி.அன்பழகன் இந்த தொகுதியின் எம்எல்ஏ. கடந்த 2001-ம் ஆண்டு முதன் முறையாக இந்த தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராக வென்ற அன்பழகன் தொடர்ந்து 4 தேர்தல்களிலும் வெற்றி பெற்று 20 ஆண்டுகள் தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளார். 2016 தேர்தலில் வென்று உயர் கல்வித்துறை அமைச்சர் ஆன நிலையில் பாலக்கோடு பகுதியில் அரசினர் கலைக் கல்லூரியை பெற்றுத் தந்துள்ளார்.
தருமபுரி மாவட்ட அரசு சட்டக் கல்லூரியும் இந்த தொகுதியில் தான் அமைந்துள்ளது. தொகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். தமிழகத்திலேயே அதிக தக்காளி சாகுபடி பகுதிகளில் ஒன்றாக பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் வன்னியர், கொங்கு வேளாளர், இஸ்லாமியர் ஆகியோர் கணிசமான அளவில் உள்ளனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
பாலக்கோடு, மாரண்ட அள்ளி, காரிமங்கலம் என 3 பேரூராட்சிகள் இந்த தொகுதியில் உள்ளன. இவை தவிர, பஞ்சப்பள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, மகேந்திரமங்கலம், ஜக்கசமுத்திரம், சாமனூர், அத்திமுட்லு, சிக்கமாரண்டஅள்ளி, அனுமந்தபுரம், எலுமிச்சனஅள்ளி, கும்பாரஅள்ளி, கெரகோடஅள்ளி, புலிக்கல், ஜெர்த்தலாவ், நாகனம்பட்டி, அடிலம், திண்டல், இண்டமங்கலம், திருமால்வாடி உள்ளிட்ட பாலக்கோடு, காரிமங்கலம் வட்டங்களில் உள்ள கிராமங்களும் அடங்கியுள்ளன.
தொகுதியின் பிரச்சினைகள்:
பாலக்கோடு பகுதி தக்காளி விவசாயிகள், விலை வீழ்ச்சி காலங்களில் மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் தக்காளியை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றும் ஆலை ஒன்றை அரசோ அல்லது அரசு வழிகாட்டுதலில் சுய உதவிக் குழுவோ பாலக்கோடு பகுதியில் நடத்த வேண்டும் என்று பாலக்கோடு பகுதி தக்காளி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுதவிர, தென்பெண்ணை ஆற்று நீரை எண்ணேல்கொல்புதூர் பகுதியில் இருந்து இணைப்புக் கால்வாய் அமைத்து காரிமங்கலம் அருகிலுள்ள தும்பல அள்ளி அணைக்கு கொண்டு வர வேண்டும்.
தென்பெண்ணை நீரை அலியாளம் பகுதியில் இருந்து இணைப்புக்கால்வாய் மூலம் பாலக்கோடு அருகிலுள்ள தூள்செட்டி ஏரிக்கு கொண்டு வர வேண்டும் என்பதும் பல ஆயிரம் விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | கே.பி.அன்பழகன் | அதிமுக |
| 2 | பி.கே.முருகன் | திமுக |
| 3 | கே.ஜி.காவேரிவர்மன். | தேமுதிக |
| 4 | கே.மன்னன் | பாமக |
| 5 | பி.நஞ்சப்பன் | ஐஜேகே |
| 6 | எஸ்.வெங்கடேசன் | நாம் தமிழர் |
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,16,957 |
| பெண் | 1,13,210 |
| மூன்றாம் பாலினத்தவர் | 16 |
| மொத்த வாக்காளர்கள் | 2,30,183 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1967 - 2006 )
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
| 1967 | கே. முருகேசன் | காங்கிரஸ் | 29186 | 50.05 |
| 1971 | எம். வி.காரிவேங்கடம் | திமுக | 32378 | 52.84 |
| 1977 | பி. எம். நரசிம்மன் | அதிமுக | 21959 | 32.87 |
| 1980 | எம். பி. முனிசாமி | அதிமுக | 38999 | 52.36 |
| 1984 | பி. தீர்த்தராமன் | காங்கிரஸ் | 55459 | 65.93 |
| 1989 | கே. மாதப்பன் | அதிமுக (ஜெ) | 37168 | 38.77 |
| 1991 | எம். ஜி. சேகர் | அதிமுக | 63170 | 62.17 |
| 1996 | ஜி. எல். வெங்கடாசலம் | திமுக | 56917 | 49.74 |
| 2001 | கே. பி. அன்பழகன் | அதிமுக | 75284 | 62.38 |
| 2006 | கே. பி. அன்பழகன் | அதிமுக | 66711 | --- |
| ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
| 1967 | எம். பி. முனுசாமி | திமுக | 26096 | 44.75 |
| 1971 | பி. கே. நரசிம்மன் | காங்கிரஸ் (ஸ்தாபன) | 28901 | 47.16 |
| 1977 | கே. டி. கோவிந்தன் | ஜனதா கட்சி | 17701 | 26.5 |
| 1980 | ஆர். பாலசுப்ரமணியம் | காங்கிரஸ் | 34864 | 46.81 |
| 1984 | எம். பி. முனிசாமி கவுண்டர் | திமுக | 26045 | 30.96 |
| 1989 | டி. சந்திரசேகர் | திமுக | 32668 | 34.08 |
| 1991 | கே. அருணாச்சலம் | ஜனதா தளம் | 23911 | 23.53 |
| 1996 | சி. கோபால் | அதிமுக | 34844 | 30.45 |
| 2001 | ஜி. எல். வெங்கடாசலம் | திமுக | 35052 | 29.04 |
| 2006 | கே. மன்னன் | பாமக | 61867 | --- |
| 2006 சட்டமன்ற தேர்தல் | 57. பாலக்கோடு | ||
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | K.P. அன்பழகன் | அ.தி.மு.க | 66711 |
| 2 | K. மன்னன் | பாமக | 61867 |
| 3 | P. விஜயசங்கர் | தே.மு.தி.க | 11882 |
| 4 | P. ராஜகோபால் | சுயேச்சை | 2612 |
| 5 | P.. ரவிசங்கர் | சுயேச்சை | 2356 |
| 6 | M. மாறன் | சுயேச்சை | 1700 |
| 7 | S. மதிவானன் | சுயேச்சை | 1418 |
| 8 | D ரமேஷ்குமார் | பி.ஜே.பி | 1181 |
| 9 | P. சித்தன் | சுயேச்சை | 550 |
| 10 | L. அந்தோனி | சுயேச்சை | 327 |
| 11 | M. அன்பழகன் | சுயேச்சை | 298 |
| 150902 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
| 2011 சட்டமன்ற தேர்தல் | 57. பாலக்கோடு | ||
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | K.P. அன்பழகன் | அ.தி.மு.க | 94877 |
| 2 | V. செல்வம் | பாமக | 51664 |
| 3 | K. ஹரிநாத் | சுயேச்சை | 2449 |
| 4 | P. குமாராதேவன் | பி.ஜே.பி | 1937 |
| 5 | M. ராமசாமி | சுயேச்சை | 1101 |
| 6 | M. கலைச்செல்வன் | ஐ.ஜே.கே | 874 |
| 7 | C. தீர்த்தகீரி | சுயேச்சை | 702 |
| 8 | V. முருகன் | சுயேச்சை | 667 |
| 9 | M. பன்னீர்செல்வம் | பி.எஸ்.பி | 659 |
| 10 | P. எடிசன் | சுயேச்சை | 591 |
| 11 | K. முருகன் | சுயேச்சை | 393 |
| 12 | E. அன்பழகன் | புபா | 344 |
| 156258 |