

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| ஜே கார்த்திகேயன் (பாமக) | அதிமுக |
| எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்) | திமுக |
| பிரேமலதா விஜயகாந்த் | அமமுக |
| ஆர்.பார்த்தசாரதி (ஐஜேகே) | மக்கள் நீதி மய்யம் |
| ந.அமுதா | நாம் தமிழர் கட்சி |
மாவட்டத் தலைநகர் கடலூரிலிருந்து 60 கி.மீட்டர் தொலையில் உள்ள விருத்தாசலம் தொகுதியில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த 5 கோபுரங்களுடன் விளங்கும் விருத்தகிரீஸ்வரர் ஆலயம் ஆன்மீக சுற்றுலா பயணிகளின் திருத்தலமாக உள்ளது இத்தொகுதிக்கான தனிச்சிறப்பு.
இதுதவிர விருத்தாசலம் ரயில்வே சந்திப்பு, சென்னையிலிருந்து தென்மாவட்டங்களை இணைக்கும் ரயில் பாதையில் அமைந்துள்ளதால், வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
தொகுதி பிரச்சினைகள்
அரசு சார்ந்த திட்டங்கள் ஒதுக்கீடு செய்வதில் போதிய கவனமின்மையால், சாலை வசதிகள் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கும் தொகுதி வாசிகள், இதுவரை நடைபெற்ற 15தேர்தல்களில் இத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படுவோர் பெரும்பாலும் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்துவந்த நிலையில், கடந்த 2016-ல் நடைபெற்ற தேர்தலில் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது,
தொகுதி வாசிகளுக்கு சற்று ஆறுதல் அளித்தாலும், தொகுதி மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
கடந்த காலங்களை பார்க்கும் போது விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் 1952 முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த 15தேர்தல்களில் 4 முறை காங்கிரஸ், அதிமுக3 முறை, திமுக,தேமுதிக தலா 2 முறையும், உழைப்பாளர் கட்சி, ஜனதா பார்ட்டி, பாமக மற்றும் சுயேட்சை உள்ளிட்டவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றன.
கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் இத்தொகுதியில் போட்டியிட்ட போது, தமிழகத்தின் கவனத்தை ஈர்த்த விருத்தாசலம் தொகுதி, 2016-ம் ஆண்டு தேர்தல் முடிவுக்குப் பிறகும் பரபரப்பாக பேசப்பட்டது.2006 முதல் 2016-ம் ஆண்டு வரை தேமுதிகவிடமிருந்த இத்தொகுதியை, 2016-ம் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற வி.டி. கலைச்செல்வன், ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா அணியில் நீடித்து, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்து வந்த நிலையில், திடீரென தினகரன் அணிக்கு மாறினார். பின்னர் மீண்டும் எடப்பாடி அணிக்கு மாறி தொகுதியை பரபரப்பாகவே வைத்திருந்தாரே தவிர, மற்றபடி தொகுதியில் வேறெந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயத் தொழிலை சார்ந்த இத்தொகுதியில், விவசாயத்திற்கு நீராதாரங்களான மணிமுக்தா ஆறு ஒருபுறம் வறண்டு மணல் கொள்ளையர்களுக்கு கை கொடுப்பதோடு, மறுபுறம் கழிவுநீர் ஓடையாக மாறிவருகிறது. அரசு சார்பில் சிட்கோ உருவாக்கப்பட்டு அங்கு உருவாக்கப்பட்ட பீங்கான் பொருள் உற்பத்திக் கூடங்கள் முடங்கும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
விருத்தாசலம் ரயில் சந்திப்பு வழியாக தினந்தோறும் 40 ரயில்கள் வரை புழங்குகிறது. இந்த ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு 3 கி.மீட்டர் தூரம் உள்ளதால், ரயில் சந்திப்புக்கு வந்து செல்லும் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவாதால், ரயில் சந்திப்புக்கு அருகிலேயே பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை ஏட்டளவிலேயே உள்ளது.
2016-ம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலின் போது, தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மறைந்த ஜெயலலிதா, விருத்தாசலத்தில் தான் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியபோது, முதல் பிரச்சாரக் கூட்டத்திலேயே கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவமும் நடை இங்கு தான் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டத் தலைநகர் உருவாக்கப்படும் எனக் கூறினார். அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை, மாறாக அதன்பிறகு 7 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட போதிலும், அதில் விருத்தாசலம் இடம்பெறவில்லை என்பது தொகுதி மக்களின் கவலை.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
விருத்தாசலம் வட்டம் (பகுதி)
சேதுவராயன்குப்பம், எ,மரூர், மாளிகைமேடு, கொத்தனூர் (பாந்தவன்பட்டு), ஆதியூர், கொளப்பாக்கம் (இரஞ்சி), ஐவதுகுடி, இலங்கியனூர், வலசை, சுருவம்பூர், டி.மாவீடந்தல், காட்டுப்பாரூர், விசலூர், கர்நத்தம், கோவிலானூர், பள்ளிபட்டு, ரூபநாராயணநல்லூர், கோ.பூவனூர், கட்டியநல்லூர், கோ.பவளங்குடி, புலியூர், பாலக்கொல்லை, நடியப்பட்டு, முடப்புளி, இருப்பு, இருளாக்குறிச்சி, மனக்கொல்லை, ஆலடி, மாத்தூர், பெரியவடவாடி, விஜயமாநகரம், அகரம், பரூர், இடைச்சித்தூர், பிஞ்சனூர், மேமாத்தூர், வண்ணாத்தூர், நல்லூர், நகர், சேப்ப்பாக்கம். காட்டுமயினூர், கீழக்குறிச்சி, மேலக்குறிச்சி, பெரியநெசலூர், சீறுநெசலூர், வேப்பூர், நாரயூர், திருப்பெயூர், கோ.கொத்தனூர், சித்தூர், சாத்தியம். கச்சிபெருமாநத்தம். சின்னபரூர், எருமனூர், சின்னவடவாடி, செம்பளாக்குறிச்சி, கவணை, சித்தேரிக்குப்பம், இருசாலக்குப்பம், பழையபட்டிணம்.
கோட்டேரி, பெரியகாப்பான்குளம். சின்னகாப்பான்குளம், கொல்லிருப்பு, அம்மேரி, முதனை, நரிமனம், கச்சிராயநத்தம், கோபுராபுரம். காணாதுகண்டான், சின்னபண்டாரன்குப்பம், குப்பநத்தம், புதுக்கூரைப்பேட்டை, மணவாளநல்லூர், கோமங்களம், பரவளுர், தொரவளுர், விளாங்காட்டூர், படுகளாநத்தம், கீரம்பூர், மன்னம்பாடி, டி.பொடையூர், வரம்பனூர், கலியாமேடு, பூலம்பாடி, நிராமணி, எடையூர், பெரம்பலூர், கொடுக்கூர், முகுந்தநல்லூர், சாத்துக்குடல் (மேல்பாதி), சாத்துக்குடல் (கீழ்பாதி), கா.இனமங்களம், ஆலிச்சிக்குடி, நேமம், கருவேப்பிலங்குறிச்சி, பேரளையூர், ஆலந்துரைபட்டு, சத்தியவாடி, பி.கொல்லத்தன்குறிச்சி, தெற்குவடக்குபுத்தூர், வேட்டக்குடி, வண்ணான்குடிகாடு, ராஜேந்திரபட்டிணம் மற்றும் சின்னாத்துக்குறிச்சி கிராமங்கள்.
பேரூராட்சி-மங்களம்பேட்டை, நகராட்சி-விருத்தாச்சலம்
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,16,780 |
| பெண் | 1,14,881 |
| மூன்றாம் பாலினத்தவர் | 10 |
| மொத்த வாக்காளர்கள் | 2,31,671 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | வி.டி.கலைச்செல்வன் | அதிமுக |
| 2 | பாவாடை கோவிந்தசாமி | திமுக |
| 3 | வி.முத்துக்குமார் | தேமுதிக |
| 4 | ப.தமிழரசி | பாமக |
| 5 | சி.செல்லத்துரை | ஐஜேகே |
| 6 | வி.சிவராஜ் | நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
| 1952 | காளிமுத்து | TTP |
| 1957 | எம்.செல்வராஜ் | சுயேச்சை |
| 1962 | ஜி.பூவராகவன் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 1967 | ஜி.பூவராகவன் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 1971 | எம்.செல்வராஜ் | திமுக |
| 1977 | சி.ராமநாதன் | திமுக |
| 1980 | ஆர்.தியாகராஜன் | திமுக |
| 1984 | ஆர்.தியாகராஜன் | திமுக |
| 1989 | ஜி.பூவராகவன் | ஜனதா தளம் |
| 1991 | ஆர்.டி.அரங்கநாதன் | அதிமுக |
| 1996 | குழந்தை தமிழரசன் | திமுக |
| 2001 | ஆர்.கோவிந்தசாமி | பாட்டாளி மக்கள் கட்சி |
| 2006 | விஜயகாந்த் | தேமுதிக |
| 2011 | முத்துக்குமார் | தேமுதிக |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | விஜயகாந்த் | தேமுதிக | 61337 |
| 2 | கோவிந்தசாமி | பாமக | 47560 |
| 3 | காசிநாதன் | அதிமுக | 35876 |
| 4 | அரவிந்த் | பகுஜன் சமாஜ் கட்சி | 1265 |
| 5 | விஜயகாந்த் | சுயேச்சை | 1174 |
| 6 | மங்கபிள்ளை | சமாஜ்வாதி கட்சி | 878 |
| 7 | விஜயகாந்த்.கே | சுயேச்சை | 832 |
| 8 | செந்தில்முருகன் | பகுஜன் சமாஜ் கட்சி | 646 |
| 9 | விஜயகாந்த் | சுயேச்சை | 589 |
| 10 | சாமீ | சுயேச்சை | 489 |
| 11 | துரை ராமசந்திரன் | சுயேச்சை | 377 |
| 12 | பிரதீப்குமார் | சுயேச்சை | 313 |
| 13 | ஸ்ரீனிவாசன் | சுயேச்சை | 208 |
| 14 | தேவி ஜரீனா | சுயேச்சை | 187 |
| 151731 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | முத்துகுமார்.V | தேமுதிக | 72902 |
| 2 | நீதிராஜன்.T | காங்கிரஸ் | 59261 |
| 3 | கிருஷ்ணமூர்த்தி.R | இந்திய ஜனநாயக கட்சி | 11214 |
| 4 | ராஜேந்திரன்.K | சுயேச்சை | 5640 |
| 5 | சந்தானமூர்த்தி.S | சுயேச்சை | 2907 |
| 6 | பழமலை.A | பாஜக | 2614 |
| 7 | அருட்செல்வன்.K | பகுஜன் சமாஜ் கட்சி | 1437 |
| 8 | சுலோச்சனா அய்யாசாமி | சுயேச்சை | 1216 |
| 9 | அருண்குமார்.R | சுயேச்சை | 1097 |
| 158288 |