

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| ஜெகன் மூர்த்தி (பாமக) | அதிமுக |
| ராஜேந்திரன் | திமுக |
| டாக்டர் ஏ.பி.ஆர்.பக்தரட்சகன் | அமமுக |
| இளங்கோவன் | மக்கள் நீதி மய்யம் |
| கி.ரமேஷ் | நாம் தமிழர் கட்சி |
நெய்வேலி தொகுதி 2008 ம் ஆண்டு தொகுதி சீரமப்பிற்கு பின் முதன்முதலாக கடந்த 2011 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது உதயமான தொகுதி ஆகும். பண்ருட்டி சட்டமன்ற தொகுதியின் ஒரு பாதியும், குறிஞ்சிப்பாடி தொகுதியின் மற்றொரு பகுதியும் உள்ளடக்கிய தொகுதியாக உருவானது தான் நெய்வேலி சட்டமன்ற தொகுதி.
நெய்வேலி நகரியம், மற்றும் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 38 ஊராட்சிகள் இந்த தொகுதியில் உள்ளது.
தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உட்பட தென் இந்தியாவிற்கே மின்சாரம் வழங்கி வரும் மத்திய அரசின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் இந்த தொகுதியில் உள்ளது.
இந்த தொகுதியில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 888 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1லட்சத்து 8 ஆயிரத்து 936 ஆண் வாக்களர்களும், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 935பெண் வாக்காளர்களும், 17திருநங்கைகளும் உள்ளனர்.
கடந்து வந்த தேர்தல்(2011-2016) ஆண்டு வெற்றி பெற்றவர்
2011 எம். பி. எஸ். சிவசுப்பிரமணியன் அதிமுக
2016 சபா. ராஜேந்திரன் திமுக
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,01,514 |
| பெண் | 99,496 |
| மூன்றாம் பாலினத்தவர் | 8 |
| மொத்த வாக்காளர்கள் | 2,01,018 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | ஆர்.ராஜசேகர் | அதிமுக |
| 2 | சபா.ராஜேந்திரன் | திமுக |
| 3 | டி. ஆறுமுகம் | மார்க்சிஸ்ட் |
| 4 | கோ.ஜெகன் | பாமக |
| 5 | சி.ஜி.எஸ்.சந்திரன் | ஐஜேகே |
| 6. | சி.கலைச்செல்வன் | நாம் தமிழர் |
| 7. | டி. வேல்முருகன் | தமிழக வாழ்வுரிமை கட்சி |
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | சிவசுப்பிரமணியன்.M.P.S | அதிமுக | 69549 |
| 2 | வேல்முருகன்.T | பாமக | 61431 |
| 3 | கற்பகம்.M | பாஜக | 1406 |
| 4 | பாண்டியன்.S | சுயேச்சை | 1273 |
| 5 | லில்லி.P | எல்எஸ்பி | 1232 |
| 6 | குமார்.P | இந்திய ஜனநாயக கட்சி | 971 |
| 7 | இளங்கோவன்.S | லோக் ஜனசக்தி கட்சி | 576 |
| 8 | சந்திரா.P | சோசியலிஸ்ட் | 478 |
| 9 | குமுரகுரு.V.K | சுயேச்சை | 441 |
| 137357 |