வன்னியர் உள் ஒதுக்கீட்டால் புதிய சர்ச்சை: கலக்கத்தில் தென்மாவட்ட அமைச்சர்கள்

வன்னியர் உள் ஒதுக்கீட்டால் புதிய சர்ச்சை: கலக்கத்தில் தென்மாவட்ட அமைச்சர்கள்
Updated on
1 min read

வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரம், அதிமுகவுக்கு தென் மாவட்டங்களில் சிக்கலை ஏற்படுத்துமோ? என அக்கட்சி அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

அதிமுக கூட்டணியில் இடம்பெறுவது உறுதி செய்யும் முன்பாக, வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நிபந்தனையை விதித்தது. அதற்கான அறிவிப்பு வெளியான மறுநாளே, அதிமுக-பாமக கூட்டணி உறுதியாகி பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது, வட மாவட்டங்களில் அதிமுகவுக்கு பலமாக இருந்தாலும் தென் மாவட்டங்களில் இந்த உள் ஒதுக்கீடு விவகாரம் அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்துமோ? என அக்கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர். அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரம் தென்மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதை அமமுக, தங்களுக்குச் சாதமாகத் திருப்ப தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. உசிலம்பட்டியில் கூட வன்னியர் இட ஒதுக்கீடை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தென் மாவட்டங்களில் பரவலாக ஆங்காங்கே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை கட்சித் தலைமை எப்படி முறியடிக்கப் போகிறது என தெரியவில்லை’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in