

சட்டப்பேரவைத்தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்யவும், பொதுக்கூட்டம் நடத்தவும் தேனி மாவட்டத்தில் 53 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன.
இதில் தேனி உட்கோட்டத்தில் பங்களாமேடு, அல்லிநகரம் உள்ளிட்ட 11 இடங்களும், போடியில் திருவள்ளுவர் சிலை, தேவாரம் வ.உ.சி. திடல் உள்ளிட்ட 9 இடங்களும், உத்தமபாளையத்தில் தேரடி, புறவழிச்சாலை சந்தை தெரு உள்ளிட்ட 12 இடங்களும், ஆண்டிபட்டியில் வைகை சாலை, க.விலக்கு உள்ளிட்ட 9 இடங்களும், பெரியகுளத்தில் அரண் மனைத்தெரு, தாமரைக்குளம் வ.உ.சி. சிலை உள்ளிட்ட 12 இடங்கள் என மொத்தம் 53 இடங்களில் அரசியல் கட்சியினர் உரிய அனுமதி பெற்று பொதுக்கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண்தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.