எம்.கே.தியாகராஜ பாகவதர் 111-வதுபிறந்த நாள் விழா

எம்.கே.தியாகராஜ பாகவதர் 111-வதுபிறந்த நாள் விழா
Updated on
1 min read

எம்.கே.தியாகராஜ பாகவதர் 111-வது பிறந்த நாள் விழா கரூர் வீரகம்மாளர் ஒருங்கிணைப்பு, விஸ்வ மக்கள் சக்தி பேரவை, தமிழ்நாடு, புதுச்சேரி விஸ்வகுல சமூக சங்க கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்டச் செய லாளர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார்.

கூட்டமைப்பு மாநிலத் தலைவர் சிவசண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள், தியாகராஜ பாகவதர் உருவப் படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “விஸ்வ கர்மா சமூகத்தினரை கூட்டுறவு வங்கிகளில் நகை மதிப்பீட் டாளராக நியமிக்கவேண்டும். விஸ்வகர்மா ஜெயந்தி நாளான செப்.7-ம் தேதியை தமிழக அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் ரூ.22 லட்சத்தில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை தொடங்க உத்தரவிட்டதால், அதிமுகவுக்கு வரும் தேர்தலில் விஸ்வகர்மா சமூகத்தினர் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in