

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை மீது நேற்று காலை ஒரு போர்வை போர்த்தப்பட்டு, தலையில் கருப்பு நிற தொப்பி அணிவிக் கப்பட்டிருந்தது. இதையறிந்த திராவிடர் கழகத்தினர் அங்கு திரண் டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் உடனடியாக அங்கு சென்று, விசாரணை நடத்தினர்.
அப்போது, அப்பகுதியில் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்த ஒரு பெண், தான் வைத்திருந்த போர்வையையும், தொப்பியையும் பெரியார் சிலை மீது அணிவித்தது தெரியவந்தது. இதையடுத்து, சிலை மீதிருந்து அவற்றை அகற்றிய திராவிடர் கழகத்தினர், இது தொடர்பாக போலீஸாரிடம் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை.