

திருப்பத்தூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப் பட்ட ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாவட்ட எல்லைப்பகுதிகளில் நிலை கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும்படையினர் தீவிர கண் காணிப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை அவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வியாபாரிகள் மற்றும் பொமக்கள் என யாராக இருந்தாலும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்வதாக இருந்தால், அதற்கான ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டு எல்லை பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ் வழியாக வந்த வாகனங்களை மடக்கிசோதனையிட்டனர். அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரி காதர் (50) என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்தார். அவரை மடக்கி சோதனை யிட்டபோது ரூ.2 லட்சம் பணம் அவரிடம் இருப்பதும், அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த நிலை கண்காணிப்பு குழுவினர் அந்த பணத்தை திருப்பத்தூர் வட் டாட்சியர் அலுவலகத்தில் ஒப் படைத்தனர்.