

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்து டன் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார்.
சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு கிராமத்தில் வசிப்பவர் தொழிலாளி சுரேஷ். இவர், தனது மனைவி பேச்சியம்மாள் மற்றும் 2 குழந்தைகளுடன், தி.மலை மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு நேற்று தற்கொலைக்கு முயன்றார். அவரை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது, “நம்பேடு கிராமத்தில் 4 சென்ட் இடம் வாங்கியதாகவும், பின்னர் அளந்து பார்த்தபோது ஒரு சென்ட் குறைவாக இருப்பதாகவும், அந்த இடத்தை தனக்கு விற்பனை செய்தவர் அபகரித்துக் கொண்டதாகவும், அதனை பெற்றுத் தர வேண்டும்” என தெரிவித்தார். இதையடுத்து, அவரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.