

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பறக்கும் படை குழுவினர், நிலை கண்காணிப்புக் குழுவினர் மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழுவினர் உள்ளிட்ட தேர்தல் கண்காணிப்பு குழுக்களின் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்து பேசும்போது, "தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அரசியல் கட்சியினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. ஆவணங்கள் இல்லாமல் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை எடுத்துச் செல்லலாம். தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அனைவரும்தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் தங்களது குறைகளை 1950 என்ற எண்ணுக்கு அழைத்து புகாராக தெரிவிக்கலாம். பணம் எடுத்துச் செல்லும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கனிவாக நடந்துகொள்ள வேண்டும்’’என்றார்.