

காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சிப்பெற்ற காவலர்கள் 19 ஆண்டுகள் கழித்து நேற்று வேலூரில் சந்தித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண் டனர்.
வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த 2002-ம் ஆண்டு பயிற்சி பெற்ற 292 காவலர்கள் தற்போது பல்வேறு மாவட்டங்களில் காவல் ஆய்வா ளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், தலைமை காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
பயிற்சி பள்ளியில் சந்திப்பு
நிகழ்ச்சிக்கு காவலர் பயிற்சி பள்ளியின் ஆய்வாளர் கனிமொழி தலைமை வகித்தார். உதவி காவல் ஆய்வாளர்கள் சிவசங்கரன், பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, காவல் ஆய்வாளர் ஜெயவேலு வரவேற்றார்.
நினைவுகள் பகிர்வு...