வரும் தேர்தலில் தமிழகத்தின் நம்பர் ஒன் கட்சி தேமுதிகதான் பொருளாளர் பிரேமலதா உறுதி

வரும் தேர்தலில் தமிழகத்தின் நம்பர் ஒன் கட்சி தேமுதிகதான் பொருளாளர் பிரேமலதா உறுதி
Updated on
1 min read

தமிழகத்தின் நம்பர் ஒன் கட்சிதேமுதிகதான் என்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.

கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “தமிழகத்தின் நம்பர் ஒன் கட்சி தேமுதிகதான். யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. மக்களை சந்திக்க குறுகிய காலமே உள்ளது.

234 தொகுதிகளிலும் மக்களை சந்தித்து வெற்றி பெற்றால் என்ன செய்வோம் என்பதை விளக்கிக் கூற காலஅவகாசகம் வேண்டும் என்பதால்தான் சில நாட்களுக்கு முன்பு கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து விரைந்து பேச்சுவார்த்தையை தொடங்குங்கள் என அக்கறையோடு கூறினேன்.

நான் அவரசப்படுகிறேன், டென்ஷன் ஆகிறேன், கெஞ்சுகிறேன் என்றெல்லாம் விமர்சனம் செய்தனர். கெஞ்சுவது தேமுதிகவுக்கு பழக்கமில்லை, எந்த காலத்திலும் டென்ஷன் இல்லை.தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்து களம் கண்ட கட்சி. இருப்பினும் பொருளாதாரரீதியாக பின்தங்கி இருப்பதால் கூட்டணியை நாட வேண்டியுள்ளது. நிச்சயம் நமக்கான காலம் வரும்.அப்போது விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி அமையும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in