தேர்தல் அலுவலர்கள் நியமனம்

தேர்தல் அலுவலர்கள் நியமனம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளுக்கான தேர்தலை யொட்டி, ஊத்தங்கரை தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சேதுராமலிங்கம், பர்கூர் தொகுதிக்கு சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் பாக்கியலட்சுமி, கிருஷ்ணகிரி தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் கற்பகவல்லி, வேப்பனப்பள்ளி தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு நல அலுவலர் கனகராஜ், ஓசூர் தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன், தளி தொகுதிக்கு உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண். 1077 மற்றும் 1950 என்ற எண்களில் தெரிவிக்கலாம். மேலும், குறுந்தகவல் மூலம் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் 6369700230 என்ற செல்போன் எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in