காக்களூர் தொழிற்பேட்டையில் சர்வர் கோளாறு அஞ்சல் சேவை பெற முடியாமல் மக்கள் அவதி

காக்களூர் தொழிற்பேட்டையில் சர்வர் கோளாறு   அஞ்சல் சேவை பெற முடியாமல் மக்கள் அவதி
Updated on
1 min read

திருவள்ளூரை அடுத்த காக்களூரில் அமைந்துள்ள தொழிற்பேட்டையில் அப்பகுதி பொதுமக்கள் வசதிக்காக, அஞ்சல் நிலையம் செயல்படுகிறது. இந்த அஞ்சல் நிலையத்தில் கணினி சர்வர் சரியாக வேலை செய்யாததால், அஞ்சலக சேவைகள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, காக்களூர் அஞ்சல் நிலையத்தில் சில நாட்களாக கணினி சர்வர் வேலை செய்யாததால், விரைவு தபால்களை அனுப்புவது, சேமிப்புக் கணக்கு, தொடர் வைப்புக் கணக்கு, பொன்மகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட கணக்குகளில் பணம் செலுத்த முடியவில்லை. கிசான் விகாஸ் பத்திரம் போன்ற சேமிப்புப் பத்திரங்களையும் பெற முடியவில்லை. இதனால், இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

தீர்வுகாண கோரிக்கை

இதுகுறித்து, தொடர்புடைய அஞ்சலக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இப்பிரச்சினைக்கு உடனடியாக அதிகாரிகள் தீர்வு காண முன்வர வேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in