8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்

8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருவிடைமருதூர் (தனி) தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர்- 9445000286, கும்பகோணம் தொகுதிக்கு கோட்டாட்சியர்- 9445000466, பாபநாசம் தொகுதிக்கு மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்- 9786759657, திருவையாறு தொகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்- 9442149101 ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, தஞ்சாவூர் தொகுதிக்கு கோட்டாட்சியர்- 9445000465, ஒரத்தநாடு தொகுதிக்கு கலால் உதவி ஆணையர்- 9445074594, பட்டுக்கோட்டை தொகுதிக்கு உதவி ஆட்சியர் 9445000467, பேராவூரணி தொகுதிக்கு முத்திரை கட்டண தனித் துணை ஆட்சியர்- 9600175148 ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ள னர்.

எனவே, தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார்களை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவல்களிடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ம.கோவிந்தாவ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in