இன்று புதிய கட்சி தொடங்குகிறார் அர்ஜுனமூர்த்தி

இன்று புதிய கட்சி தொடங்குகிறார் அர்ஜுனமூர்த்தி
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிப்பதாக இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த ரா.அர்ஜுனமூர்த்தி இன்று சென்னையில் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறார்.

இதுகுறித்து ரா.அர்ஜுனமூர்த்தி 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது:

நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சிக்கான பெயர், கொள்கை, சின்னம், கொடி, உறுப்பினர் சேர்க்கை, வேட்பாளர் தேர்வு, சட்ட ரீதியான பணிகள் உள்ளிட்ட‌ அனைத்தையும் நான் நீண்ட காலமாக செய்து வந்தேன். அந்த அனுபவத்தில் மிக குறுகிய காலத்தில் கட்சி தொடங்கி தேர்தலை சந்திப்பதற்கான அனைத்துப் பணிகளையும் முடித்துள்ளேன்.

சனிக்கிழமை (இன்று) சென்னையில் எங்கள் கட்சியின் பெயர், கொடி, கொள்கை, உறுதிமொழி ஆகிய‌வற்றை அறிவிக்கிறேன். வரும் மார்ச் 1-ம் தேதி கட்சியின் சின்னம் உள்ளிட்டவற்றை வெளியிட இருக்கிறேன். கட்சி தொடங்குவதற்கு முன்பே எங்கள் கட்சியில் சேர்வதாக 30 லட்சம் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 6 மாவட்ட செயலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ரசிகர்களும் எங்களோடு கைகோத்துள்ளனர்.

நாங்கள் மாற்று அரசியலை முன்வைத்து தேர்தலை சந்திப்பதால் எந்த பெரிய கட்சிகளுடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை. 234 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுகிறோம். இவ்வாறு அர்ஜுனமூர்த்தி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in