

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். காலமுறை ஊதியம், நாள் கணக்கீட்டின்படி போனஸ் வழங்க வேண்டும், ஜமாபந்தி படி, இயற்கை பேரிடர் மீட்புப் பணி செய்யும்போது இணைப்புப் படி என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் 200-க்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டனர்.