கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை

கடலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பேருந்துகள்.
கடலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பேருந்துகள்.
Updated on
1 min read

கடலூர், விழுப்புரம் மாவட்டத் தில் போக்குவரத்துக் கழகதொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டதால் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

அரசு போக்குவரத்துக் கழகதொழிலாளர்கள் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரிநேற்று முதல் காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டுள்ளனர். இதில் தொமுச, சிஐடியூ, எச்எம்எஸ், ஏஐடியூசி உள்ளிட்ட 7 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.

கடலூர் மண்டலத்தில் மொத்தமுள்ள 586 பேருந்துக ளில் நேற்று காலை குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 80 சதவீத அரசுபேருந்துகள் இயக்கப்படாத தால் பொதுமக்கள் கடும் அவ திக்குள்ளாகினர்.

மேலும், நேற்று காலை கடலூர் பணிமனையில் தற்காலிக ஓட்டுநராக ஆட்டோ டிரைவரை வைத்து ஒரு பேருந்தை இயக்கியபோது முன்புறம் இருந்த பேருந்து மீதுமோதியதால் பதற்றமான தற்காலிக ஓட்டுநர் பேருந்தைநிறுத்திவிட்டு தலைமறைவாகி விட்டார்.

தொமுச, சிஐடியூ உட்பட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

மாவட்டத்தில் மாலை 4 மணிநிலவரப்படி 40 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. கிராமப் புறங்களுக்குச் செல் லக்கூடிய பேருந்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதால், நகரப் பகுதிக்கு வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி கல்லூரி களுக்குச் செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.

தனியார் டிராவல்ஸ் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள சுற்றுலா பேருந்து களை நேற்று சென்னை, திருச்சிக்கு கூடுதலாக இயக்கின. இதனால் சென்னைசெல்லும் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட வில்லை.

கள்ளக்குறிச்சி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in