

கடலூர் மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு 25 எஸ்ஐக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் காவல்நிலைய எஸ்ஐ ஜோதி ஒரத்தூர் காவல் நிலையத்திற்கும், புவனகிரி எஸ்ஐ ஜெயசங்கர் தூக்கணாம் பாக்கம் காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். நெய்வேலி அனைத்து மகளிர் காவல்நிலைய எஸ்ஐ ஜெயதேவி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், சிதம்பரம் நகரகாவல் நிலைய எஸ்ஐ தனசேகரன் காட்டுமன்னார் கோவில் காவல் நிலையத்திற்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். மந்தாரகுப்பம் காவல் நிலைய எஸ்ஐ ரவிச்சந்திரன் நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்திற்கும், வடலூர் எஸ்ஐ கமலஹாசன் சோழதரம் காவல் நிலையத்திற்கும், விருத்தாசலம் எஸ்ஐ பிரேம்குமார் நெல்லிக்குப்பம் காவல் நிலையத் திற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட மாவட்டத்தில் 25 சப்- இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து எஸ்பி அபிநவ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.