

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆணைபோகி கிராமத்தில் வசித்தவர் விவசாயி ராஜேந்திரன்(65). இவர், அதே கிராமத்தில் உள்ள தனது நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். பின்னர், மோட்டார் சுவிட்ச்சை போட்டுவிட்டு நிலத்தில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த இரும்பு பைப் மீது மின் கசிவு இருந்துள்ளது. தவறுதலாக, இரும்பு பைப் மீது கால் வைத்ததால், மின்சாரம் தாக்கி ராஜேந் திரன் உயிரிழந்தார். இதுகுறித்து வட வணக்கம்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.