வெடிவிபத்து பலி எண்ணிக்கை 22 ஆனது

வெடிவிபத்து பலி எண்ணிக்கை 22 ஆனது

Published on

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். சிவகாசி, சாத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வந்த மேலும் 12 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், இந்த விபத்தில் பலத்த காயமடைந்து சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நடுச்சூரங்குடியைச் சேர்ந்த பவுல்ராஜ் என்பவரது மனைவி ஜெயா (50) நேற்று இறந்தார். அதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in