

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் விருதுநகரில் ஒப்பாரிப் போராட்டம் நடந்தது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ்தர் ராணி தலைமை வகித்தார்.
மாநில துணைத் தலைவர் சாரதாபாய், பொருளாளர் கச்சதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், ஒப்பாரிப் பாடல்களைப் பாடி தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.