திருப்பூர் மாவட்டத்தில் ரத்த வங்கி ஆம்புலன்ஸ் இயக்கம்

திருப்பூர் மாவட்டத்தில்  ரத்த வங்கி ஆம்புலன்ஸ் இயக்கம்
Updated on
1 min read

திருப்பூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பாட்டில் உள்ள ரத்த வங்கிக்கு, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் ரத்த பரிமாற்று குழுமம் இணைந்து குளிர்சாதன பெட்டிகளுடன் கூடிய ரத்த வங்கி ஆம்புலன்ஸ் வழங்கியது. இந்த ஆம்புலன்ஸ் செயல்பாட்டை, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தொடங்கிவைத்தார்.

மாவட்ட துணை இயக்குநர் பாக்கியலட்சுமி ( சுகாதாரப் பணிகள்), மருத்துவக் கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், ரத்த வங்கி மருத்துவ அலுவலர்கள் பிரியா மற்றும் வசந்தகுமார், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த ஆம்புலன்ஸில் 14 இருக்கைகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட ரத்த பைகளை கொண்டுவர முடியும் என தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in