விழுப்புரத்தில் பூந்தோட்டகுளம் பூங்கா பயன்பாட்டுக்கு வந்தது

விழுப்புரம் பூந்தோட்ட பூங்காவில் குவிந்திருக்கும் மக்கள் கூட்டம்.
விழுப்புரம் பூந்தோட்ட பூங்காவில் குவிந்திருக்கும் மக்கள் கூட்டம்.
Updated on
1 min read

விழுப்புரம் பூந்தோட்டகுளம் பூங்கா நேற்று முதல் பயன் பாட்டுக்கு வந்தது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் சீரமைக் கப்பட்ட பூந்தோட்ட குளத்தை முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். நடைப்பயிற்சி செல்ல ஏதுவாக குளத்தை சுற்றி பாதை அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் குழந்தைகள் விளையாட விளையாட்டுக்கருவிகள், இளை ஞர்களுக்கு உடற்பயிற்சி கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இணைய வசதி ( User Name ; Commissioner, Password: 01020304) பவ்டா தொண்டு நிறுவனத்தின் பண்பலை வானொலி, ஆவின் பாலகமும் உள்ளது.

நேற்று காலை முதல் விழுப்புரம் நகரவாசிகள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் குழந்தைகளுடன் இப்பூங்காவிற்கு வருகை புரிந்தனர். சிறுவர்கள் ஆரவாரத்துடன் விளையாடி மகிழ்ந்தனர். சிலர் நடைப்பயிற்சி சென்றனர். தினமும் அதிகாலை முதல் இரவு 8 மணி வரை தற்போது பூங்கா திறந்து இருக்கும் என்று நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in