

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக ரூ.3 ஆயிரம், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அடையாள அட்டை வழங்கி முழு ஊதியத்துடன் வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.