இலவசம், சலுகைகளால் உயர்ந்த கடன் தமிழ்நாடு கள் இயக்கம் குற்றச்சாட்டு

இலவசம், சலுகைகளால் உயர்ந்த கடன்  தமிழ்நாடு கள் இயக்கம் குற்றச்சாட்டு
Updated on
1 min read

தேவையில்லாத இலவசங்களையும், சலுகைகளையும் வழங்கியதால்தான் தமிழக அரசின் கடன் தொகை உயர்ந்துள்ளது என தமிழ்நாடு கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் கள்தடை நீக்கம் பற்றிய அறிவிப்பு இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறும் என்ற எதிர்பார்த்து இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

ஆங்கிலேயர் இந்தியாவை விட்டுச் சென்றபோது நமது நாட்டிற்கு கடன் இல்லை. அப்போது ஒரு ரூபாயின் மதிப்புக்கு நிகராக ஒரு அமெரிக்க டாலர் இருந்தது. ஆனால், தமிழக அரசின் கடன் தொகை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.1.7 லட்சம் கோடி உயர்ந்து, தற்போது ரூ.5.7 லட்சம் கோடியாக கடன் தொகை உயர்ந்துள்ளது.

அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தேவையில்லாத இலவசங்களையும், சலுகைகளையும் அளித்ததன் விளைவாகவே, கடன் தொகை உயர்ந்துள்ளது. கடன் இல்லாத தமிழகமாக மாற்றினால் மட்டுமே, அரசும், மக்களும் தன்மானத்துடன் இருக்க முடியும். இதை உணர்ந்து அரசு இயந்திரமும், அரசியல் கட்சிகளும் செயல்பட வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in